Monday, May 25
Shadow

இந்த மாஸ்டர் படத்துல நான்தான் ஹீரோ. எப்படின்னா நான் விஜய்க்கு வில்லன்னா அவருக்கு எனக்கு வில்லன். அப்படின்னா நான்தான் ஹீரோ. – மக்கள செல்வன் விஜய்சேதுபதி

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியதாவது…

தளபதி விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பது எல்லாருக்கும் தெரியும். அவருடன் நடிப்பது ஒரு நல்ல அனுபவம்.

பட போஸ்டர்களில் அவர் பேர் பக்கத்துல என் பேரும் இருக்கட்டும் சொல்லியிருக்காரு.

ஒரு முறை நான் விஜய் சார் கிட்ட கேட்டேன். ஏன் சார்? நீங்க அவ்வளவு பேச மாட்டுறீங்க கேட்டேன். நான் பேசுவதை விட மற்றவர்கள் சொல்வதை கேட்க ஆசைப்படுகிறேன் என்றார். இதுபோல அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

மாஸ்டர் பட போட்டோ சூட்டிங்கில்தான் நான் முதன்முறையாக சந்தித்தோம். அப்போவே அவர் எனக்கு ஒரு நல்ல கம்பர்ட்டாக இருக்கும் மாறு நடந்துக் கொண்டார்.

அவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வைங்க. ரொம்ப அழகா வெட்கப்படுவாருன்னு சொன்னேன்.

இந்த படத்தோட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என் ரசிகர்களுக்கு என்ட்ரி பாஸ் கிடைக்காம பண்ணிட்டாரு.

அவரே நிறைய எடுத்துக்கிட்டாரு. ஆனா அவரு நல்ல மனுசன். ஆனா சம்பளம்தான் சரியான டைமுக்கு தர மாட்டாரு.

ஆனா 96 படம் ரிலீசுக்கு உதவி செஞ்சாரு.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே மாஸ் ஆக இருக்கும். அதையே ஒரு படமாக எடுக்கலாம்.

அவரு என்னைய டா போட்டு கூப்பிட சொன்னாரு. அதான் அப்படியே கூப்புறேன். நாங்க 2013ல் சந்தித்து கொண்டோம்.

இந்த மாஸ்டர் படத்துல நான்தான் ஹீரோ. எப்படின்னா நான் விஜய்க்கு வில்லன்னா அவருக்கு எனக்கு வில்லன். அப்படின்னா நான்தான் ஹீரோ.

இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.

எனக்கு எங்க அப்பாதான் மாஸ்டர். அவர அடிச்சிக்க ஆளே கிடையாது. நான் சரக்கு அடிச்சிட்டு அவர் போட்டோவ பாத்து திட்டுவேன்.

நான் நல்லா இருக்கும்போது அவரு பாக்கமா போய்ட்டாரு.

தளபதி விஜய் நல்ல மனுசன். நான் மட்டும் சொல்லல.. எல்லாருமே சொல்றாங்க” என பேசினார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.