இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமாஅப்போ ஜரா படம் ஓட வில்லையே?

உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா-2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டொலேடி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர்காலம்’. நயன்தாராவுடன் பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாக இருந்தது. நீதிமன்ற வழக்குநிலுவையில் இருப்பதால் இன்று வெளியாகவில்லை.

இதற்கிடையில் வி.மதியழகன் தயாரித்துள்ள ‘கொலையுதிர்காலம்’ படத்தை இன்கம்ப்ளீட் மூவி என்று ட்வீட் பண்ணினார் நயன்தாராவின் இன்றைய காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரவிருந்தார் தயாரிப்பாளர் மதியழகன். இந்தவிஷயத்தை அறிந்ததும் அவரை அழைத்து காம்ப்ரமைஸ் செய்த விக்னேஷ்சிவன், ‘கொலையுதிர்காலம்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பிரஸ் ரிலீஸை அனுப்பியுள்ளார்.
”கொலையுதிர்காலம்’ படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் இந்த படத்தின் மீது நல்ல கவனமும் அக்கறையும் செலுத்தியுள்ளார். தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும், இறுதியில் பேச்சு வார்த்தைகள் மூலம் எல்லாம் சுமுகமாக முடிந்தது. ‘கொலையுதிர்காலம்’ பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளதை மீடியாக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் மதியழகன்.
விக்னேஷ் சிவனின் பாராட்டை வைத்து பப்ளிசிட்டி செய்தால் ‘கொலையுதிர்காலம்’ படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கும் இந்த தயாரிப்பாளரை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்டவர்களால் தான் தயாரிப்பாளர்களின் மரியாதை குறைகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவான ஐரா திரைப்படம் விக்னேஷ் அவனால் பாராட்டப்பட்ட படம் ஆனால் அந்த படம் ஓடவில்லையே படம் ஹிட்டாக வில்லை