Saturday, October 23
Shadow

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

நடிப்பு – தினேஷ், ஆனந்தி, மாரிமுத்து முனிஷ்காந்த மற்றும் பலர்

தயாரிப்பு – நீலம் புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – அதியன் ஆதிரை

இசை – தென்மா

மக்கள் தொடர்பு – குணா

வெளியாகும் தேதி – 6 டிசம்பர் 2019

ரேட்டிங் – 3.25/5

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான நடிகர் கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது,

இரண்டாம் தயாரிப்பான அட்டை கத்தி தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ரசிகர்களை கண்டிப்பாக இந்த திரைப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் கதைக்களம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த கதைக்களம் எடுத்துக் கொண்ட கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஒரு உயிரோட்டமான பின்னணியைத் தரும்.

அந்த விதத்தில்தான் இந்தப் திரைப்படத்தில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை எடுத்துக் கொண்ட ‘காயலான் கடை’ கதைக்களம் தமிழ் திரைப்பட உலகில் மிக மிகப் புதியது. யோசித்துப பார்த்தால் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் சொல்லவில்லை. யாரும் இப்படி யோசித்ததில்லை. அதுவே படத்திற்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்துவிடுகிறது.

‘ஸ்கிராப்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வியாபாரம் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் பல கோடி ரூபாய் புழங்குகிறது என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. இந்த பின்னணியில் சமூக அக்கறையுடன் ஒரு கதையை எழுதி, அதை முடிந்த அளவிற்கு நம்மை ஈர்க்கும் விதத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

மாரிமுத்து நடத்தும் பழைய இரும்புக் கடையில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார் கதாநாயகன் தினேஷ். அவருக்கு மேல்சாதியைச் சேர்ந்த ஆசிரியை பயிற்சி முடித்த கதாநாயகி ஆனந்தி மீது காதல். சொந்தமாக லாரி வாங்கி ஓட்ட வேண்டுமென்று கதாநாயகன் தினேஷுக்கு லட்சியம். கடைசி ‘லோட்’ ஆக பாண்டிச்சேரி வரை பழைய இரும்பு சாமான்களை ஏற்றிக் கொண்டு கிளம்புகிறார்.

கடலில் அழிப்பதற்காக கொட்டப்படட இரண்டாம் உலகப் போரின் போது இருந்த ஒரு பழைய வெடிகுண்டு கடற்கரையில் ஒதுங்கி எப்படி எப்படியோ பயணித்து, கதாநாயகன் தினேஷ் ஏற்றிச் செல்லும் லாரியில் செல்கிறது. வெடிக்கும் வாய்ப்பு கொண்ட அந்த வெடிகுண்டைத் தேடி போலீஸ் ஒரு புறம் துரத்த, மறுபுறம் பத்திரிகையாளர் ரித்விகா தேட, வீட்டில் எற்பட்ட பிரச்சினையால் காதலன் கதாநாயகன் தினேஷைத் தேடி கதாநாயகி ஆனந்தி வர, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

Read Also  அசுரகுரு திரை விமர்சனம். ரேட்டிங் - 2.25/5

ஒரு பரபரப்பான திரைக்கதைக்குரிய அனைத்து விஷயங்களும் படத்தின் ஆரம்பத்திலேயே காட்சிகளாக இணைத்த இயக்குனர் அதியன் ஆதிரை.
அந்த பரபரப்பை தொடர்ந்து காப்பாற்றத் திணறியிருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் காமெடியாக சொல்லலாமா, சீரியசாக சொல்லலாமா என தடுமாறியிருக்கிறார்.

அந்த குண்டு வெடித்தால் ஊர் அழியும், இத்தனை ஆயிரம் பேர் இறப்பார்கள் என்று டாகுமெண்டரியைக் காட்டியும் கூட அந்த பதற்றம், அந்த உணர்வு நம் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை. அதுதான் இந்த குண்டு படத்தின் பெரிய குறை ஆக உள்ளது.

மற்றபடி கதாபாத்திரத்திற்குரிய பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து அவர்களை யதார்த்தமாக நடிக்க வைப்பது ஆகியவற்றில் தன் இயக்கத்தின் ஆளுமையை சரியாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அதியன் ஆதிரை.

சரியான கதையும், கதாபாத்திரங்களும் கிடைத்தால் தன்னால் அதில் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கதாநாயகன் தினேஷ். ‘கைதி’ பட லாரி டிரைவர் கார்த்தியை விட இந்த ‘குண்டு’ லாரி டிரைவர் கதாபாத்திரத்திற்குள் நன்றாக ஊடுருவி இருக்கிறார்.

யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து விஜய் சேதுபதி சீக்கிரமே முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறி விட்டார். அவருடன் சம காலத்தில் நாயகனாக அறிமுகமாக யதார்த்தமாக நடிக்கும் திறமை கொண்ட தினேஷ் இன்னும் முன்னணிக்கு வர தள்ளாடிக் கொண்டிருப்பதை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதே போன்றதொரு கதாபாத்திரத்தில் கதாநாயகி ஆனந்தி. காதலன் கதாநாயகன் தினேஷ் மீது தீவிர காதல் பைத்தியமாக இருக்கிறார்.

ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் இவருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பில்லை. ஆனால், இவரை விட ரித்விகா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமும், நடிக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. பத்திரிகையாளராக, தோழர் ஆக அந்த குண்டு வெடிக்காமல் இருக்க வேண்டுமென படத்தின் கதாநாயகனை தினேஷ் விட அதிகம் பரபரப்பாக வேலை செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் பெயர் வாங்கப் போகிறவர்களில் முதலிடம் ரித்விகாவுக்குத்தான்.

இரும்புக் கடை முதலாளி ஆக மாரிமுத்து, அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அப்பாவி ஊழியர் ஆக முனிஷ்காந்த், மேலதிகாரி சொல்வதைக் கேட்டு அப்படியே வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் லிஜேஷ் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள்.

தென்மா இசையமைப்பில், “மாவலியோ மாவலி, இருச்சி” பாடல்கள் மண் மணத்துடன் அமைந்து ரசிக்க வைக்கிறது.

மற்ற டெக்னீஷியன்களில் கலை இயக்குனர் ராமலிங்கம் அதிகம் பேசப்பட வைக்கிறார். மற்றவர்களை விட அவருக்குத்தான் படத்தின் வேலை அதிகம்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் தயாரிப்பான ‘பரியேறும் பெருமாள்’ படம் பேசிய அரசியல் அளவிற்கு இந்த இரண்டாவது படம் பேசவில்லை. போர் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என படம் சொல்கிறது. அதை ஒரு லாரி டிரைவரின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி சொல்லி இருக்கிறார்கள்.

Read Also  Oh மணப்பெண்ணே திரை விமர்சனம். ரேட்டிங் – 4 /5

காதலில் சாதி பாகுபாடு பற்றி சொல்ல விருப்பப்பட்டவர்கள், ஆதிக்க வல்லரசு நாடுகள் ஆயுதங்களை விற்பது பற்றியும், ஆயுத வியாபார ஊழல் பின்னணியையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் இந்த குண்டு நமது ரசிகர்கள் இதயம் வரை இறங்கியிருக்கும்.

குண்டு – கண்டிப்பாக சத்தம் கேட்கும்

CLOSE
CLOSE