கதிர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3./ 5

நடிகர் நடிகைகள் :- வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா மற்றும் பலர்.

இயக்கம் :- தினேஷ் பழனிவேல்.

ஒளிப்பதிவு :- ஜெயந்த் சேது மாதவன்.

படத்தொகுப்பு :- தீபக் த்வாரகநாத்.

இசை :- பிரஷாந்த் பிள்ளை.

தயாரிப்பு :- துவரகா ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் :- 3 /5

தமிழ் திரைப்பட உலகில் சில திரைப்படங்களை பார்க்கும் போது நமக்கு ஒரு ஆச்சரியம் கிடைக்கும்.

அப்படி ஒரு ஆச்சரியத்தைக் ஏற்படுத்தியுள்ள திரைப்படம்தான் இந்த கதிர்.

நாம வாழ்றது முக்கியமில்லை யாருக்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்ற கருத்தைதான் இந்தக் ‘கதிர்’ திரைப்படம் அழுத்தமாக கூடியிருக்கிறார்கள்.

ஒரு யதார்த்தமான திரைப்படத்தைக் கொடுத்ததற்காக இயக்குனர் தினேஷ் பழனிவேல், கதாநாயகன் வெங்கடேஷ், பாட்டியாக நடித்த ரஜினி சாண்டி ஆகியோரை மனதாரப் பாராட்டலாம்.

தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு, கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிச் செல்கிறார் கதாநாயகன் வெங்கடேஷ்.

இஞ்சினியரிங் படிப்பை முடித்திருந்தாலும் ஆங்கிலம் சரியாகப் பேச வராததால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

சென்னையில் அவருடைய நண்பன் அறையில் தங்கி வேலை தேடி வருகிறார்.

அந்த வீட்டின் உரிமையாளரான பாட்டி ரஜினி சாண்டியுடன் அதிக அளவில் பாசப் பிணைப்பு ஏற்படுகிறது.

பல இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு வேலை கிடைக்காத நிலையில் மாற்றத்திற்காக தனது சொந்த ஊருக்குச் செல்கிறார் கதாநாயகன் வெங்கடேஷ்.

அவருடன் கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்.

தனக்காக யோசிப்பதை விட மற்றவர்களுக்காகவும் யோசிக்க வேண்டும் என பாட்டி ரஜினி சொல்ல, ஊரிலேயே சொந்த தொழில் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறார்.

அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இநத கதிர் திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் கதிர் கதாபாத்திரத்தில் புதுமுகம் வெங்கடேஷ். கதாநாயகன் என்று தெரியாமல் கதையின் நாயகனாகவே தெரிகிறார்.

எந்த இடத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் கல்லூரி மாணவராகவும் காதலனாகவும் அதிரடி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் வெங்கடேஷ் ஜோடியாக கதாநாயகி பாவ்யா டிரிக்கா.

கொஞ்சம் கோபக்காரப் பெண் கதாபாத்திரம் அருமையாக நடித்திருக்கிறார்.

திடீரென கதாநாயகன் வெங்கடேஷை வேண்டாமென்று சொல்லி அவரை விட்டுப் போவதுதான் கொஞ்சம் இடிக்கிறது.

மற்றொரு பிளாஷ்பேக் காதல் கதையும் திரைப்படத்தில் உண்டு.

அந்தக் காதல் காட்சி பாட்டி ரஜினி சாண்டி, சந்தோஷ் பிரதாப் சம்பந்தப்பட்டது.

அதில் இளமைக் கால ரஜினி சாண்டியாக நடித்திருக்கும் நடிகை சிரிப்பாலேயே கவர்கிறார்.

இநத கதிர் திரைப்படத்தில் கதாநாயகன் வெங்கடேஷ் நண்பர்களாக சிலர் புதுமுகங்கள் இயல்பான நடித்திருக்கிறார்கள். .

அதில் நட்பு, சோகம், கலகலப்பு, பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் பழனிவேல்.

மொத்தத்தில் கதிர் திரைப்படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.