கடைசி விவசாயி திரை விமர்சனம் ரேட்டிங் 4.5./ 5

நடிகர் நடிகைகள்– தெய்வத்திரு நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு, ரேய்ச்சல் ரெபேக்கா, டி.முணிஸ்வரன், சாப்ளின் சுந்தர், ஜி.காளிமுத்து, காளைப்பாண்டியன், மற்றும் பலர்.

இயக்கம் – ம.மணிகண்டன்

ஒளிப்பதிவு – ம.மணிகண்டன்.

படத்தொகுப்பு – பி. அஜித்குமார்.

இசை – சந்தோஷ் நாராயணன் – ரிச்சர்ட் ஹார்வி.

தயாரிப்பு – டிரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் – 4./5

நம் அனைவருக்கும் உணவளிப்பவனே உயர்ந்தவன் அவனே கடவுள்.

நம் மண்ணில் எதைப் போட்டால் எது விளையும் என கண்டுபிடித்தவர் நாம் வணங்கும் தமிழ் தெய்வமான முருகப் பெருமான்.

இந்த உலகில் முதல் முதலில் விவசாயத்தை கண்டு பிடித்தவர் ஒரு சித்தர் அந்த சித்தர்தான் நாம் வணங்கும் தமிழ் தெய்வமான முருகப் பெருமான்.

அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட விவசாயி பற்றிய வாழ்வியல் திரைப்பாடம் தான் இந்த கடைசி விவசாயி.

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கடைசி விவசாயி.

இந்த திரைப்படத்துக்கு, இயக்கம் மட்டும் அல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என சகல பணிகளையும் கவனித்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

தமிழ் திரைப்பட உலகில் திரைப்படத்திற்கு திரைப்படம் கதாநாயகனாக மட்டு மில்லாமல் வில்லன் குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபத்திரங்களிலும் அசால்டாக நடிப்பார் வித்யாசம் காட்டி தனது அசாத்திய நடிப்பால் அசரவைப்பவர் விஜய் சேதுபதி.

இருப்பினும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை விஜய் சேதுபதிக்கு தரவில்லை.

ஆகையால் அவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கடைசி விவசாயி

தமிழ் திரைப்பட உலகில் கடந்த சில வருடங்களாக கிராமம் என்றால் பச்சைப் பசேலென்ற வயல்வெளி, தாவணி பாவாடை சட்டை போட்ட பெண்கள், கைலி அணிந்த இளைஞர்கள், திருவிழா பாடல் என்ற போலியான திரைப் படங்களில் காட்டுவதை இந்த திரைப்படத்தின் மூலம்  உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

நீண்ட காலத்துக்கு பிறகு ஓர் அசல் கிராமத்தையும், கிராமத்து மனிதர்களையும் கண்முன் கண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

உசிலம்பட்டி அருகே இருக்கும் ஒரு அழகான கிராமத்தில் விவசாயம் செய்து தன்னை மட்டுமே நம்பி வாழ்ந்து வாழ்கிறார் கதை நாயகன் நல்லாண்டி.

80 வயது மதிக்கத்தக்க நல்லாண்டி நாத்து நடவோ அறுவடை செய்யவோ வேலைக்குஆள்  கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை தனி மனிதனாக நின்று அனைத்தையும் செய்து வருகிறார்.

அப்படி அந்த ஊரில் மழை தண்ணி இல்லாததால், விவசாயத்தை மறந்துவிட்ட ஊர் மக்கள் உசிலம்பட்டி அருகே இருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் குலதெய்வம் கோவில் திருவிழாவை நடத்தினால் மட்டுமே கண்டிப்பாக மழை வரும் என நம்புகிறார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் காலாகாலமாக செய்து வரும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரிய முறைகளில், குலதெய்வ வழிபாட்டிற்கு தேவையான மண் பானை செய்வதில் தொடங்கி, முதல் நெல், திருவிழாவுக்கான இசை வாத்தியங்கள் என வழக்கமாக நடைமுறையில் இருக்கும் முறையையே பின்பற்ற வேண்டும் என ஊர் மக்கள் முடிவு செய்கிறார்கள்.

குலதெய்வம் கோவில் திருவிழா நடத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சொந்த பந்தங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தலை கட்டுகள் எல்லோருக்கும் தொடர்பு விட்டுப்போகிறது.

அதனால் குலதெய்வ வழிபாடு நடத்தியாக வேண்டும் என ஒரு பெரிய தலைக்கட்டுகள் முடிவு செய்கிறது.

என்னென்ன தடைகள் வருகிறது அந்த ஊரில் மழை பெய்ததா? இல்லையா? அந்த ஊரில் உள்ள குலதெய்வத்தின் தடைகளை அனைத்தும் விலகியதா? இல்லையா? கடைசியில் திருவிழா நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த கடைசி விவசாயி திரைப்படத்தின் மீதிக்கதை.

80 வயது மதிக்க நல்லாண்டிதான் இந்த கடைசி விவசாயி திரைப்படத்தின் கதையின் நாயகன்.

ஊரின் மாயாண்டி என்னும் கதாபாத்திரத்தில் விவசயியாக காது கேட்காதவராக கதையின் நாயகன் நல்லாண்டி மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்,

இந்த திரைப்படத்தின் கதை நாயகனாக நடித்த நல்லாண்டி அவருக்கு சேரவேண்டிய பாராட்டுகளை அவருடைய காதில் விழ தெய்வத்திரு நல்லாண்டி ஐயா அவர்கள் தற்போது நம்மோடு இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

உலகிலேயே முதல் முதலாக விவசாயத்தை கண்டுபிடித்த சித்தர் தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார்.

தனது காதலி இல்லாததால் காதலின் நினைவாக
காதலால் கிறுக்குப் பிடித்து அலையும் ராமய்யா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி,

விஜய் சேதுபதி ராமய்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது.

அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும்
நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

15 ஏக்கர் விவசாய செய்யும் நிலத்தை விற்று யானை மற்றும் பகனையும் வாங்கி பிழைப்பு நடத்தி வரும் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்.

இநத கடைசி விவசாயி திரைப்படத்தில் நீதிபதியாக
மங்கையர்கரசியாக கதாபாத்திரத்தில்
நடித்த ரேய்ச்சல் ரெபேக்கா, மிகவும் எதார்த்தமாக உள்ள நடிப்பு மிகவும் அருமை.

இவருடைய நடிப்பு உண்மையான நீதிபதி மனிதாபிமானத்துடன் இருக்கிறார்களோ அதேபோலவே நடித்திருக்கிறார்

கிராமத்து வசீகர முகத்துடன் விசாரிப்பு, வசன உச்சரிப்பு கண்டிப்புடன் கட்டளையிடுவது, அக்கறையாக கதை நாயகன் நல்லாண்டியிடம் நடந்து கொண்டு இறுதிக்காட்சியில் உதவி செய்வது என்று நச்சென்று மனதில் பதிந்து சிறப்பாக நடித்துள்ளார்.

நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் இவருக்காக காத்திருக்கின்றது.

இந்த திரைப்படத்தில்
கதையின் நாயகி என்றால் அது நீதிபதியாக வரும் ரேய்ச்சல் ரெபேக்காதான்.

விவசாயத்தில் தண்ணீர் விடாமல் இருந்தால் ஆயிரம் பயிர்கள் இறந்துவிட்டார் எனக் கூற இந்த மனிதரா மயிலை கொன்று புதைத்து இருப்பாரா.? என காவல்துறையிடம் கேட்கும்போது மிகவும் நேர்மையான நீதி தேவதையாக படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறார்.

உப்பு தோசையாக டி.முனீஸ்வரன், சொட்டையனாக ஜி.காளிமுத்து, மூக்கனாக சாப்ளின் சுந்தர், காவல்துறை சேர்ந்த ஏட்டாக காளைப்பாண்டியன் என்ற ஒவ்வொருவரும் அவரவர் கிராமத்து கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் கதையுடன் ஒன்றிய இவர்களது நடிப்பு திரைப்படத்தில் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

அறிவின் பாடல் வரிகளில் சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசை மனதை வருடிச் செல்கிறது.

இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி. இருவர்களின் பின்னனி இசை ரசிக்க வைக்கிறது.

ஏற்கெனவே பல கோவில்களில் கேட்ட முருகா முருகா பாடல்களை தவிர்த்து புதுப்பாடல்களை போட்டு இருக்கலாம்.

பி.அஜித்குமார் மெதுவாக செல்லும் கதைக்கு ஏற்றவாறு முடிந்தவரை சுவாரஸ்யமாக படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், உடை, ஒளிப்பதிவு, தயாரிப்பு இயக்கம் இயக்குனர் ம.மணிகண்டன்.

அத்தனை துறைகளையும் தானே செவ்வென கையிலெடுத்து கடைசி விவசாயி திரைப்படத்தை செவ்வனே செய்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ம.மணிகண்டன்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இயற்கை எழிலை காடு, மேடு, மலை, நிலம், கிராமத்து வீடு ஆடு, மாடு, மயில், யானை என்று அச்சு அசலாக காமிரா கோணங்களில் ரசிக்க ரசிக்க படம் பிடித்து கிராமத்து விவசாயத்திற்கு சென்றது போல் படைத்திருக்;கிறார்.

இயக்குனர் ம.மணிகண்டன். இந்த திரைப்படம் அனைவராலும் பேசப்படும் இவரின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும் விருதுகள் கண்டிப்பாக அதிக விருதுகள் கிடைக்கும்.

மொத்தத்தில் கடைசி விவசாயி திரைப்படம் மீண்டும் விவசாயத்தை நினைவூட்டும் கிராமத்து அருசுவை விருந்து.

error: Content is protected !!