777 சார்லி திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.

நடிகர் நடிகைகள் :- ரக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி: தேவிகா, ராஜ் B ஷெட்டி, பாபி சிம்ஹா, தன்ராஜ் S, ஷர்வரி, கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே, சல்மான் அகமது, டேனிஷ் சையத், அபிஜித் மகேஷ், மற்றும் பலர்.

இயக்கம் :- கிரண்ராஜ் K.

ஒளிப்பதிவு :- அரவிந்த் S காஷ்யப்.

படத்தொகுப்பு :- பிரதீக் ஷெட்டி.

இசை :- நோபின் பால்.

தயாரிப்பு :- பரம்வா ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் :- 3.75 / 5.

ஒரு ஆறறிவு உள்ள மனிதனுக்கும், ஒரு ஐந்தறிவுள்ள நாய்க்கும் உள்ள பாசப் பிணைப்பை சொல்லி உருக வைக்கும் அளவிற்கு வந்திருக்கும் திரைப்படம் ‘777 சார்லி’.

கன்னடத் திரைப்பட உலகில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்திருக்கும் திரைப்படம் 777 சார்லி

எங்குமே ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாமல் திரைப்படம் பார்க்கும் நம்மை உணர்வு பூர்வமாய் கட்டிப் போட்டுவிடுகிறார் இயக்குனர் கிரண்ராஜ்.

இந்த 777 சார்லி திரைப்படத்தைப் பார்த்த பிறகு இல்லத்தில் ஒரு நாயை வளர்த்து வருபவர்கள் அவர்கள் நாய் மீது மேலும் கண்டிப்பாக அதிகமான பாசம் வைப்பார்கள் என்பது உறுதி.

இல்லத்தில் நாய் வளர்க்காதவர்கள் நாமும் நமது இல்லத்தில் ஒரு நாயை வளர்க்கலாமே என்று கண்டிப்பாக ஆசைப்படுவார்கள்.

அந்த அளவிற்கு ஒரு அன்பான, பாசமான, அழகான, அற்புதமான நாயை திரைப்படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுவயதிலேயே தனது அம்மா அப்பா மற்றும் தஙகை ஆகியோரை விபத்தில் இழந்தவர்.

கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி தான் உண்டு தன்து வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.

அவர வசிக்கும் காலனியில்
யாருடனும் பழகாமல் தனக்கென்று தனி உலகத்தில் வாழ்ந்து வரும் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியிடம் ஒரு நாய் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.

உறவு, நட்பு என எதுவுமே இல்லாமல் வீட்டில் தனியாக வசிக்கிறார்.

வேலை பார்க்கும் கம்பெனி, வீடு என அவருடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்டவரிடம்  எங்கிருந்தோ வரும் ஒரு நாய் யதேச்சையாக அடைக்கலம் ஆகிறது.

முதலில் அந்த நாயை வெறுக்கும் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி போகப் போக அந்த நாய் இல்லாமல் தானில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அந்த நாயும் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியை விட்டு செல்ல மறுக்கிறது.

ஒரு கட்டத்தில் நாய்க்கு கேன்சர் இருப்பது ரக்ஷித் ஷெட்டிக்கு தெரிய வருகிறது.

Read Also  அன்சார்டட் (ENGLISH) திரை விமர்சனம் ரேட்டிங் 3 / 5

அந்த நாய் மீது அதிகமான அன்பு பாசம் வைத்திருக்கும் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாட்கள்தான் அந்த நாய் உயிருடன் இருக்கும் எனக் கூறுகிறார் கால்நடை மருத்துவர்.

அதற்குள் அந்த நாயின் கனவு ஒன்றை நிறைவேற்ற முயல்கிறார் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி.

அந்த நாய் என் கனவு நிறைவேறியதா? இல்லையா? இறுதியில் அநத நாய்க்கு உள்ள கேன்சரை கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி குணப்படுத்தினாரா? இல்லையா? என்பதுதான் இந்த 777 சார்லி திரைப்படத்தின் மீதிக் கதை.

2019ஆம் ஆண்டு கன்னடத்திலிருந்து தமிழுக்கு வெளிவந்த “அவனே ஸ்ரீமன் நாராயணனா” திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டவர் இந்த 777 சார்லி திரைப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரக்ஷித் ஷெட்டி தர்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

யாருடனும் பழகாமல் வெறுப்பான முகத்துடனே வலம் வரும் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி நாயுடன் பழக ஆரம்பித்தவுடன், முகபாவனைகள் அனைத்தையும் மாற்றி வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த 777 சார்லி திரைப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து காட்சிக்குக் காட்சி உருக வைக்கிறார்.

வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வாழ்பவருக்கு ஒரு நாய் பிடிப்பாக வருகிறது.

அந்த நாய் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை உணர்ந்து நடித்து உருக வைக்கிறார் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி,.

கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டிக்கு பிறகு சார்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

பல இடங்களில் அபார நடிப்பால் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது.

நாய் சார்லியின் நடிப்பைப் பார்க்கும் போது அதற்கு பயிற்சி கொடுத்த நடிப்பு சொல்லிக் கொடுத்தவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

சிறிது நேரமே வந்தாலும் பாபி சிம்ஹா மனதில் பதிகிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

சிறுமி அத்ரிகாவாக ஷர்வரி கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

விலங்கு நல வாரிய அதிகாரியாக வரும் சங்கீதா சிருங்கேரியை திரைப்படத்தின் கதாநாயகி என்று சொல்லிக் கொள்ளலாம்.

டாக்டராக ராஜ் பி ஷெட்டி நடிப்பு சூப்பர்.

திரைப்படத்திற்கு நோபின் பால் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

அதுபோல் அரவிந்த் எஸ்.காஸ்யப்பின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

அரவிந்த் எஸ்.காஸ்யப்பின் ஒளிப்பதிவு அருமையோ அருமை.

பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

நாயை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்த 777 சார்லி திரைப்படம் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து இருக்கிறது.

Read Also  தர்மபிரபு - திரை விமர்சனம்

மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள பாசத்தை எமோஷனல் குறையாமல் கொடுத்த புதுமுக இயக்குனர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள்.

நாயை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் கிரண்ராஜூ.

மொத்தத்தில் ‘777 சார்லி’ திரைப்படம் பாசத்திற்கு ஏற்ற பேரன்பு.