எனது திரைப்படங்களின் படபிடிப்பை நான் 40 நாட்களில் முடிப்பேன் – இயக்குனர் கார்த்திக் நரேன்

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இவர்.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கியதில் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இதே கார்த்திக் நரேன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அரவிந்த் சாமியை வைத்து நரகாசுரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆனால் இந்த திரைப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை, பைனான்சியல் பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் மாபியா திரைப்படம் உருவாகி விரைவில் ரிலீஸூக்கு தயாராகி விட்டது.

சமீபத்தில் கூட கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கு நடந்த பிரச்சனை குறித்து நிருபர் ஒருவர் கேட்டிருந்தார் அதற்கு கார்த்திக் நரேன் புத்திசாலித்தனமாக இது ஒரு அனுபவம் என கூறி பதிலளித்தார்.

அதேபோல் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படங்கள் மிகவும் குறுகிய நாளிலேயே எடுக்கப்பட்டதாகும், அதாவது கிட்டத்தட்ட 40 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்து விடுவாராம், இது குறித்து அவரிடம் நண்பர்  தனஞ்செயன் கேட்ட போது கார்த்திக் நரேன் கூறியது இதுதான்;

பொதுவாக நான் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் 40 நாட்களுக்கு முன்னாடியே முடித்துவிடுவேன் துருவங்கள் பதினாறு 28 நாட்கள், நரகாசுரன் 41 நாட்கள், மாபியா 33 நாட்கள், சொல்லப்போனால் அனைத்தும் திட்டமிடல் மூலம் தான் செய்ய முடியும்,..

முதலில் ஸ்கிரிப்டை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் அடுத்ததாக படம் எதிர் தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும், முன்னாடியே நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்துக்கொள்வேன். பின்பு அதுக்கு ஏத்த மாதிரி படப்பிடிப்புகளை நடத்துவோம். அதேபோல் என்னுடைய படங்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவதற்கு காரணம் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஒரு முக்கிய காரணம்.

அதேபோல் ஒரு காட்சி எடுக்கும் போதே இதற்கு எத்தனை சூட் இருந்தால் போதும் என்று நானே எனக்குள் எதைச் செய்து கொள்வேன், அதேபோல் படம் எப்படி எடுக்க வேண்டும் எந்தக் காட்சி எந்த மாதிரி எப்படி எடுக்கலாம் என எனக்குள் நானே முடிவு செய்து கொள்வேன், அதுமட்டுமில்லாமல் ஒரு காட்சி எடுக்கும்பொழுது கம்மியாக அதிகமாகவே எடுக்கமாட்டேன் சரியாக தேவையான அளவு மட்டுமே எடுப்பேன்.