அப்பாவையும் பிள்ளையையும் இயக்குனர் இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இந்த திரைப்படம் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை அடுத்து சியான் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இதில் சியான் விக்ரம் மகன் துருவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனது முதல் திரைப்படமாக ஆதித்ய வர்மா திரைப்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை கொடுத்தவர் நடிகர் துருவ் விக்ரம்.
தற்போது தந்தையுடன் இணைவதால் நிச்சயம் தந்தையுடன் போட்டி போட்டு நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.











