எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புது படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்

மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!