பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்.

சென்னை 19 மே 2021

பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்

பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான இவர் சென்னையில் காலமானார்.

வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது.

அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட உலகில் சமீபகாலமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்

ஏற்கனவே இயக்குநர்கள் கே வி ஆனந்த் தமிரா நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் நித்திஸ் வீரா என வரிசையாக பல சினிமா நட்சத்திரங்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மரணமடைந்தார்.

இதே போன்று இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

.இந்நிலையில் இந்த அதிர்ச்சி அடங்குவதற்கும் பிரபல இயக்குனர் ஷங்கரின் தயார் எஸ்.முத்துலட்சுமி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 88. இயக்குனர் ஷங்கரின் தயார் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தமிழ் திரைப்பட உலகம் அச்சத்தில் உறைந்துள்ளது.

கொரானா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேறு வாட்டி வதைப்பதால் சின்னத்திரை படப்பிடிப்புகளும் திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை அடுத்து படப்பிடிப்பு நடக்கும் தளங்களில் வேலை செய்வதற்கே நடிகர், நடிகைகளும், திரைப்பட தொழிலாளர்களும் பயப்படுகின்றனர்.

இதற்கிடையே நட்சத்திரங்கள் இறப்பது மட்டுமல்லாமல், அவர்களது சொந்தங்களும் உயிரிழந்து வருவதும் எல்லாவற்றையும் விட கொடுமையானது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலையின் உச்சக்கட்டம். கோதண்டம் அடிக்கிறது.

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.