வித்தியாசமான புரமோஷனை மேற்கொள்ளும் ‘பிகில்’ படக்குழுவினர் !

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கி இருக்கிறது. இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!