ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கவுண்டமணி, யோகிபாபு, ரவிமரியா, O A K சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, கூல் சுரேஷ், முத்துக்காளை, T R சீனிவாசன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், சென்ட்ராயன், சதீஸ் மோகன், ஆதிஷ் பாலா, சாய் ராஜகோபால் , டெம்பிள் சிட்டி குமார், ராஜேஸ்வரி, தாரணி, லேகா ஸ்ரீ, டாக்டர் காயத்ரி, மணிமேகலை, மணவை பொன் மாணிக்கம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாய் ராஜகோபால்.

ஒளிப்பதிவாளர் :- S A காத்தவராயன்.

படத்தொகுப்பாளர் :- ராஜா சேதுபதி & நோயல்.

இசையமைப்பாளர் :- சித்தார்த் விபின்.

தயாரிப்பு நிறுவனம் :- சினி கிராஃப்ட் புரொடக்ஷன்.

தயாரிப்பாளர் :- ரவிராஜா M E..

ரேட்டிங் :- 2.25./5.

சட்டமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டை வாங்கியதால் கதாநாயகன் கவுண்டமணிக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார்.

கதாநாயகன் கவுண்டமணிக்கு மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு மட்டும்தான் தனது தங்கைகளை திருமணம் செய்து வைக்கும் முடிவில் திட்டவட்டமாக இருக்கிறார்.

ஆனால் கதாநாயகி கவுண்டமணியின் தங்கைகளோ தான் காதலிப்பவர்களை தனது அண்ணன் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முயற்சித்து வருகிறார்கள்.

வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த மூவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாக நடிக்க வைத்து கதாநாயகன் கவுண்டமணியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று மூன்று தங்கைகளும் திட்டமிடுகின்றனர்.

அது ஒரு பக்கம் இருக்க மீண்டும் தேர்தல் வர இந்த தடவையாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயர்சியில் இறங்கும் கதாநாயகன் கவுண்டமணிக்கு சித்தப்பா பெரியப்பா கட்சி சீட் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள்.

கதாநாயகன் கவுண்டமணியிடம் டிரைவராக பணியாற்றிய யோகி பாபுக்கு சித்தப்பா பெரியப்பா கட்சி  சீட் கொடுக்கிறது.

அதனால் கோபமடைந்த கதாநாயகன் கவுண்டமணி,
சித்தப்பா பெரியப்பா கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்கிறார் கதாநாயகன் கவுண்டமணி.

அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட கதாநாயகன் கவுண்டமணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, தங்கைகள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, வைக்கவில்லையா?

கதாநாயகன் கவுண்டமணியின் தங்கைகள் தனது அண்ணனை ஏமாற்றி தான் காதலித்த காதலர்களை கரம் பிடித்தார்களா?, கரம் பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’ திரைப்படத்தில் காமெடி கிங் கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கவுண்டர் டயலாக்குகள் பேசுவது வழக்கம் போல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தாலும், பழைய திரைப்படங்களில் வரும் கம்பீரம், வேகம், டைமிங் மற்றும் உடல்மொழி ஆகியவை இல்லாததால் சிரிப்பவர்கள் கூட யோசித்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிரிக்கிறார்கள்.

கதாநாயகன் கவுண்டமணியுடன் கூட்டணி சேர்ந்துள்ள யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரசிகர்கள் பெரும் அளவில் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள்.

வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், சாய் ராஜகோபால்,  டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் ஆதோஷ் பாலா, ராஜேஸ்வரி, தாரணி, லேகா ஸ்ரீ, டாக்டர் காயத்ரி, மணிமேகலை,
என திரைப்படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை எந்த ஒரு குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  எஸ்.ஏ. காத்தவராயனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக பயணித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

காமெடி கிங் கவுண்டமணியை வைத்துக்கொண்டு அரசியல் நையாண்டி செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாய் ராஜகோபால்.

காமெடி கிங் கவுண்டமணியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படத்தில் பார்க்கும் உற்சாகத்துடன் வரும் கவுண்டமணியின் ரசிகர்களுக்கு அவரது தோற்றம் மற்றும் டைமிங் காமெடி உடல்மொழி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதோடு, அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாமே என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

மொத்தத்தில், ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படம் தேர்தலில் வெற்றி பெறவில்லை.