‘சட்டம் என் கையில்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சதீஷ், மைம்கோபி, அஜய்ராஜ், பாவல் நவகீதன், ரித்திகா, Kpy சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, இ.ராம்தாஸ், அஜய் தேசாய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாச்சி.

ஒளிப்பதிவாளர் :- பி ஜி முத்தையா.

படத்தொகுப்பாளர் :- மார்ட்டின் டைட்டஸ் ஏ.

இசையமைப்பாளர் :- எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் .

தயாரிப்பு நிறுவனம் :- சண்முகம் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம்.

ரேட்டிங் :- 3.5./5

தமிழ் திரைப்பட உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அவருக்கு பின் கான்ஜுரிங் கண்ணப்பன் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சட்டம் என் கையில்வரும் 27 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘க்ரைம் த்ரில்லர்’ திரைப்படம், “சட்டம் என் கையில்” திரைப்படத்தில், சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தை ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாச்சி இயக்கியிருக்கிறார்.

கதாநாயகன் சதீஷ், ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் மிகவும் பதற்றத்துடன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென குறுக்கே இருசக்கர வாகனத்தின் வரும் நபரை மீது மோதி விடுகிறார்.

அந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் இறந்துவிட இறந்தவரின் உடலை கதாநாயகன் சதீஷ் தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு பயணத்தை தொடரும் நிலையில் சோதனைச் சாவடியில் மாட்டிக் கொள்கிறார்.

சோதனை சாவடியில் இருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர் பவல் நவகீதன் இருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் செயல், காவலர்களின் கவனத்தை திசை திருப்பினாலும், காருடன் கதாநாயகன் சதீஷ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

இந்த நிலையில், அன்று இரவே ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து விட அந்தக் கொலையை செய்த அந்த கொலையாளியை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு உதவி ஆய்வாளர்களுக்குள் இடையே மிகப்பெரிய அளவில் ஈகோ யுத்தத்துடன் இருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கதாநாயகன் சதீஷை அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர் வெளியே விட்டார்களா? விடவில்லையா? அந்தப் பெண்ணை கொலை செய்தது யார்? கொலை செய்த கொலையாளியை  காவல் துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்திருக்கிறார்.

இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தில் நகைச்சுவையை நகர்த்தி வைத்துவிட்டு மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ், தனது அளவான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு மிகப்பெரிய உயிரோட்டம் கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தன்னால் இப்படிப்பட்ட கதாபாத்திரம் மட்டுமல்லாமல் எப்படியா பட்ட கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக கையாள முடியும், என்பதை இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஜய்ராஜ், இந்த சட்டம் என் கையில் திரைப்படத்தில் துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தை தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திருக்கிறார்.

மற்றொரு துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவல் நவகீதன், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் என திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் ஒளிப்பதிவின் மூலம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும்

ஒளிப்பதிவாளர்  பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் தரத்தை பன் மடங்கு அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர்  எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

காவல் நிலையத்தை மையப்படுத்தி, ஒரே இரவில் நடக்கும் மூன்று விதமான சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்பதைப் போல் யூகிக்க முடியாத அளவிற்கு இயக்குநர் சாச்சியின் திரைக்கதை மற்றும் திருப்பம் நிறைந்த காட்சிகள் யூகங்களை உடைத்து திரைப்படத்தை சுவாரஸ்யமாக இயக்கி இருக்கிறார்.

திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை இயக்குனர் சாச்சி தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவதோடு, மட்டுமல்லாமல் அனைத்து விசயங்களையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி திரைப்படத்தை மிக வேகமாக நகர்த்தி சென்றிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் திருப்பங்கள் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் ஜானரில் அருமையான திரைப்படம்.