அமரன் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன்,கீதா கைலாசம், பால் பி. பேபி, நவ்யா சுஜி,சுகன்யா சங்கர், ஷ்யாம் பிரசாத் ராஜகோபால், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜ்குமார் பெரியசாமி.
ஒளிப்பதிவாளர் :- சி.எச்.சாய்.
படத்தொகுப்பாளர் :- ஆர் கலைவண்ணன்.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம்:- ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
தயாரிப்பாளர் :- கமலஹாசன், சோனி பிக்சர்ஸ்.
ரேட்டிங் :- 4.25./5.
2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் மேஜர் முகுந்த் வரதஜானனின் வீரமரணத்தைத் தொடர்ந்து இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது வழங்கப்பட்டது.
மேஜர் மேஜர் முகுந்த் வரதஜானனின் வாழ்க்கையில் நடந்த உன்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் படிப்பதற்காக கதாநாயகி சாய் பல்லவி அந்த கல்லூரியில் சேருகிறார்.
அந்தக் கல்லூரியில் சீனியராக இருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பாண்டிச்சேரியில் நடக்க போகும் ரேம்ப் வாக் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள கதாநாயகி சாய் பல்லவிக்கு ரேம்ப் வாக் பயிற்சி கொடுக்கிறார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி சாய் பல்லவி இருவரும் காதலிக்கத் ஆரம்பிக்கிறார்கள்.
கதாநாயகி சாய் பல்லவி கதாநாயகன் சிவகார்த்திகேயனை காதலிப்பதை பற்றி தனது வீட்டில் தெரிவிக்கிறார்.
கதாநாயகி சாய் பல்லவியின் தந்தை ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு தனது பெண்ணை திருமணம் செய்துதர மறுக்கிறார.
அதன் பிறகு கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி சாய் பல்லவி பெற்றோர்களை சம்மதிக்க வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
அழகான பெண் குழந்தை பிறக்கிறது.
அதன் பின்னர் கதாநாயகன் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் கேப்டன், மேஜர் என அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று முன்னேறுகிறார்.
அதற்கு பின் 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் சீதா படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார்.
காஷ்மீரில் உள்ள ஒரு தீவிரவாத கும்பலை பிடிப்பதற்கு கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய படை முயற்சி செய்கிறார்கள்.
இந்த தீவிரவாத கும்பலை பிடிக்கும் முயற்சியில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பல விதமான இன்னல்களை சந்திக்கிறார் .
இதன்பின் கதாநாயகன் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த அமரன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் ராணுவ வீரர்களுக்கு இருக்கும் மிடுக்கு, உடல் தோற்றம் என தன்னை முழுதாக ராணுவ வீரரைப் போல் உணர்ந்து மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.
மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.
இந்த அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் மனைவியாக இந்து ரெபெகா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. காதல் காட்சிகளில் ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ளார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி சாய் பல்லவியின் காதல் காட்சிகள் தான் திரைப்படத்தின் மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
எமோஷன், படபடப்பு காதல் என தனது நடிப்பு திறமையால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கட்டிப்போடுகிறார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் மனைவியாக இந்து ரெபெகா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவியைத் தவிர வேறு எந்த நடிகை நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் இல்லாத உடல் போல் இருந்திருக்காது.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன்,கீதா கைலாசம், பால் பி. பேபி, நவ்யா சுஜி,சுகன்யா சங்கர், ஷ்யாம் பிரசாத் ராஜகோபால், அனைத்து கதாபாத்திரங்களும்
கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய். ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய். ஒளிப்பதிவு மூலம் ஆக்சன் காட்சிகளில் திறமையாக கையாண்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை மிக நெருக்கமாக உண்மைத்தன்மையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் – இந்த அமரன் வீரத் திருமகன்.