பேபி & பேபி திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜெய், யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா நக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இலவராசு, சிங்காம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பப்ரி கோஷ், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரத்தோஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரதாப்.
ஒளிப்பதிவாளர் :- : டி.பி. சரதி எஸ்.ஐ.சி.ஏ..
படத்தொகுப்பாளர் :- ஆனந்தலிங்க குமார்.
இசையமைப்பாளர் :- டி. இமான்.
தயாரிப்பு நிறுவனம் :- யுவராஜ் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- யுவராஜ் பி.
ரேட்டிங்:- 2.75./5.
பெற்றோரை எதிர்த்து கதாநாயகன் ஜெய் கதாநாயகி பிரக்யா நக்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு துபாயில் வாழ்ந்து வருகின்றனர்.
கதாநாயகன் ஜெய் கதாநாயகி பிரக்யா நக்ராவிற்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.
ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை தெரிந்துக் கொண்ட கதாநாயகன் ஜெய் தந்தை சத்யராஜ் தாய் கீர்த்தனா தனது பேர குழந்தையை பார்க்க வேண்டும் என சொந்த ஊருக்கு வரும்படி கூறுகிறார்கள்.
கதாநாயகன் ஜெய் மற்றும் கதாநாயகி பிரக்யா நாக்ரா இருவரும் தன் குடும்பத்தை காண்பதற்கு கோயம்புத்தூர் கிளம்புகிறார்.
இந்த நிலையில் மறுபக்கம் யோகி பாபு தன் தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் சாய் தன்யாவை திருமணம் செய்து கொண்டு துபாயில் வாழ்ந்து வருகிறார்.
யோகி பாபு சாய் தன்யா ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.
யோகி பாபு தன் மனைவி குழந்தையுடன் மதுரைக்கு கிளம்புகிறார்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் கதாநாயகன் ஜெய் மற்றும் யோகி பாபு இருவரும் சென்னையில் விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது, கதாநாயகன் ஜெயின் ஆண் குழந்தையும், யோகி பாபுவின் பெண் குழந்தையும் விமான நிலையத்தில் எதிர்ப்பாராத விதமாக மாறி மாறிவிடுகிறது.
கதாநாயகன் ஜெய் மற்றும் யோகி பாபு குழந்தைகள் மாறிய விஷயம் தெரியாமல் விமானத்தில் பயணம் செய்யும் நிலையில் விமானத்தில் தான் குழந்தைகள் மாறிய விஷயம் இருவருக்கும் தெரிகிறது
கதாநாயகன் ஜெய் குடும்பத்தில் குழந்தை மாறிய விஷயத்தை மறைக்க அதேபோல் யோகி பாபுவின் குடும்பத்தில் குழந்தை காணாமல் போன விஷயத்தை இருவரும் இரண்டு வீட்டிலும் குழந்தைகள் மாறியதை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
அதற்குப் பின் விமான நிலையத்தில் மாறிய குழந்தைகளை மாற்றிக் கொன்றார்களா? மாற்றிக் கொள்ளவில்லையா?
இரு குடும்பத்தாரின் குழந்தைகள் மாறியதால் குடும்பத்துக்குள் என்ன என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டது? என்பதுதான் இந்த பேபி & பேபி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பேபி & பேபி திரைப்படத்தில் கதாநாயகர்களாக ஜெய் மற்றும் யோகி பாபு நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஜெய் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
யோகி பாபுவின் காமெடி சில காட்சிகளில் வொர்க் அவுட் ஆகியுள்ளது.
இந்த பேபி & பேபி திரைப்படத்தில் கதாநாயகிகளாக பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகி பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதாநாயகி பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா குழந்தையை பிரிந்து இருக்கும் காட்சிகளில் மிகவும் எமோஷனலான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பேபி & பேபி திரைப்படத்தில் கதாநாயகன் ஜெய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தனா யோகி பாபுவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, கதாநாயகன் ஜெய் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே விக்னேஷ்காந்த், ராமர், என அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் டி.பி சாரதியின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் ஆராஅமுதே பாடல் மட்டும் நம்மை தாளம் போட வைக்கிறது.
பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரிதாக் எடுப்படவில்லை.
இரு குடும்பத்துக்கும் இடையே குழந்தை மாறிய கதையை நகைச்சுவையான கதைக் களத்துடம் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பிரதாப்.
மொத்தத்தில் பேபி & பேபி திரைப்படம் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டு இருந்தால் மிக அருமையான ஒரு காமெடி திரைப்படமாக அமைந்திருக்கும்.