ஒரேடியாக கேரளத்து பெண் குட்டியாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார் இவர்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் வரலாற்று கதையான ‘மரைக்கார் ‘ என்ற படத்தில் மோகன் லால் உடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதில் கீர்த்தி சுரேஷ் மலையாள சேச்சியாக மாறி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது