Monday, September 27
Shadow

கசடதபற திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, சம்பத், பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, யூகி சேது சென்றாயன், பஞ்சு சுப்பு, ராஜ்கமல், ரெஜினா கஸண்ட்ரா, பிரியா பவானிசங்கர், சுஜா ரோஸ், விஜயலட்சுமி, வித்யா பிரதீப், மற்றும் பலர்.

தயாரிப்பு – பிளாக் டிக்கெட் கம்பெனி.

இயக்கம் – சிம்புதேவன்

ஒளிப்பதிவு – M. S. பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம்,
R.D. ராஜசேகர், சக்தி சரவணன் S.R. கதிர்,

படத்தொகுப்பு – காசி விசுவநாதன், ராஜாமுகமது, ஆண்டனி, விவேக் ஹர்ஷன், பிரவீன் KL, ரூபன்,

இசை – யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி அமரன், சாம் C.S, ஷான் ரோல்டன்,

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா Done,

சோனி லைவ் ஓடிடி திரைப்படம் வெளியான தேதி – 27 ஆகஸ்ட் 2021

ரேட்டிங் –3.5 /5

 

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக OTT தளங்களில் தமிழ் திரைப்படங்கள் அதிகமாக வெளி‌வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் ஏற்கனவே சொன்னதை போல பல தனித்தனி குறும்படம் போல் காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் திரைப்படத்தை காண்பது போல்தான் இருக்கிறது.

என ஒரு தமிழ் திரைப்பட உலகில் பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

இயக்குநர் சிம்புதேவன் இயக்கி இருக்கும் கசடதபற திரைப்படத்தை அவர் ஏற்கனவே குறப்பிட்டதை போலவே பல்வேறு தனித்தனி கதைகளை ஒரே ஒரு முழு நீளத் திரைப்படமாகத்தான் உள்ளது.

இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு விதமான ஆறு கதைகள் அந்த ஆறு கதைகளும் ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனர் திரைக்கதையை நகர்த்தியுள்ளார்.

ஆறு கதைகளில் மிகவும் ரசிக்க வைத்த கதை பிரேம்ஜி அமரனின் கதைதான்.

பிரேம்ஜி அமரனுக்கு நடிக்கவே தெரியாது என்ற விமர்சனங்களை மாற்றி தன்னை யாரும் நடிகராக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தன்னை நிரூபித்து இருக்கிறார்.

ஒரு மருந்துக் குடோனில் வேலை பார்த்து வரும் பாலாவாக பிரேம்ஜி அமரன்.

ஒரு பணக்காரப் பெண்ணைக் ரெஜினா கஸாண்ட்ராவை காதலிக்கிறார் பிரேம்ஜி அமரன்.

நிலா செம அழகுல என்று சொல்லி அங்கு இயக்குனர் வைத்த சஸ்பெண்ஸ் ரசிக்க வைத்தது ‌.

சிம்புதேவனின் அறை‌எண் 305 ல் கடவுள் நினைவுக்கு வந்தாலும் தனது வசனங்களாலும் அதனை பிரேம்ஜி சொல்லும் விதத்திலும் படம் ரசிக்க வைக்கிறது ‌.

Read Also  கைதி திரை விமர்சனம்

பாலா பிரேம்ஜி அமரன் மீது
திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு, ஒரு தாதா சம்பதால் மிரட்டப்படுகிறான்.

அந்த தாதாவை அவனது மகனே சாந்தனு வெறுக்க, ஒரு கட்டத்தில் காவல்துறை அவனை சுட்டுக் கொல்கிறது.

எந்த உயிரையும் கொலை செய்ய நினைக்காத போலீஸ் அதிகாரியான கந்தாவை சந்தீப் கிஷன் தொடர்ந்து என்கவுன்டர் பணியில் ஈடுபடுத்துகிறான் மேலதிகாரியான பஞ்சு சுப்பு.

சந்திப் கிஷண் நடித்த போலிஸ் கதையும் ஒரு அளவிற்கு அங்கு சுவாரசியத்தை தருகிறது.

குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி ஹரீஷ் கல்யாண்.

அதற்கு அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த கதையும் சுவாரசியமாக உள்ளது.

சாக்லேட் பாய் இமேஜை தாண்டி தன்னால் நடிக்க முடியும் என்பதை ஹரிஷ் கல்யாண் உணர்த்தி உள்ளார்.

மீனவ குப்பத்தில் சத்துணவில் வேலை பார்க்கும் நிலைக்குச் செல்ல, ஒரு ஏழைப் பெண்ணான சுந்தரியால் (விஜயலட்சுமி) காப்பாற்றப்படுகிறான்.

ஒரு போலி மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்த குற்றத்தில் தூக்கு மேடை ஏறுகிறான் சம்யுத்தன் வெங்கட் பிரபு

இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் மற்றொரு பாத்திரத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தனித்தனிக் கதைகளாக துவங்கினாலும் அவற்றை ஏதோ ஒரு பாத்திரமோ, சம்பவமோ ஒன்றாக இணைத்து விடுகிறது.

இதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் எப்படித் தீர்கின்றன என்பதே மீதிக் கதை.

இந்த ஆறு கதைகளில் துவக்கத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருப்பது, முதல் கதையான பாலாவின் கதைதான்.

அந்தக் கதையில் உள்ள ஒரு எதிர்பாராத பாத்திரம், ‘அறை எண் 304ல் கடவுள்’ படத்தை நினைவுபடுத்துகிறது.

இந்தக் கதையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் படத்தைத் தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கின்றன.

இதில் ரொம்பவும் சுமாரான கதையென்றால், தாதாவின் கதைதான்.

இலக்கில்லாமல் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது.

போலீஸ் அதிகாரியின் கதையிலும் குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் கதையிலும் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

சின்னச்சின்ன பிரச்சனைகளும் இருக்கின்றன.

கடைசியாக வரும் சுந்தரி மற்றும் சம்யுத்தனின் கதையில் சில நம்பமுடியாத திருப்பங்களும் திரைக்கதையும் இருக்கின்றன என்பது ஒரு பலவீனம்.

ஒரு மருந்துக் கம்பெனியை மையமாக வைத்தே கதை நகர்கிறது.

அதில், இந்த தாதாவின் கதை இல்லாவிட்டாலும் படம் முழுமையாக இருந்திருக்கும் என்பதால், அந்தப் பகுதி பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்த படத்திலும் வெங்கட் பிரபு, சிஜா ரோஸ், விஜயலட்சுமி, சந்தீப் கிஷன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மற்ற கதைகளில் அந்த அளவிற்கு கதையின் அழுத்தம் இல்லாதது தொய்வை ஏற்படுத்துகிறது.

அனைத்து கதைகளும் ஒரு புள்ளியில் இணைக்கும் பகுதியை‌ இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம்.

Read Also  காவல்துறை உங்கள் நண்பன் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5

ஆறு கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் அது எவ்வாறு மற்றொரு பாத்திரத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் முழு திரைப்படமாக விரிவடைகிறது.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குநர் சிம்புதேவனின் முத்திரையான வசனங்கள்

தனது முந்தைய திரைப்படங்களிலும் அங்கு அங்கு தனது வசனங்கள் மூலம் அட போட வைத்து இருக்கும் இயக்குநர் சிம்புதேவன் இந்த திரைப்படத்திலும் பல இடங்களில் தனது வசனங்களால் புருவங்களை உயர்த்த வைத்து உள்ளார்.

என சிம்புதேவனின் தனது களமான வசனத்தில் சிக்ஸர்களாக அடித்து உள்ளார்.

வசனங்களில் நேர்த்தியை தந்த சிம்புதேவன் மற்ற கதைகளின் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் ஆகச் சிறந்த படைப்பாக இருந்து இருக்கும்.

ஒட்டு மொத்தமாக அங்கு அங்கு சின்ன சின்ன சர்ப்ரைஸ் , நல்ல வசனங்கள் ,நல்ல நடிகர்கள் தேர்வு என ஒரு நல்ல கலவையை சிம்புதேவன் தந்துள்ளார்.

இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றை ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு கலைஞர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்

CLOSE
CLOSE