கவிஞர் சினேகனுக்கு மக்கள் நீதி மையத்தில் புதிய பதவி*

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மிகவும் பிரபலமானார் கவிஞர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசனுடன் நெருக்கமானதை அடுத்து அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அக்கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகியாக வலம் வருகிறார். இந்நிலையில் கவிஞர் சினேகனுக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பை கமல் அளித்துள்ளார். மேலும் மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.