மக்கள் நீதி மையம் சார்பாகசென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டுவிடும் கவிஞர், பாடலாசிரியர் சினேகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
சென்னை 20 மார்ச் 2021
கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான சினேகன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கான சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை அவர் நேற்றைக்குத் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன்தன்னுடைய சொத்து மதிப்பு பட்டியலையும் இணைத்திருக்கிறார்.
கவிஞர் சினேகன் தற்போதைய நிலையில் 7,20,621 ரூபாய் வங்கியில் கையிருப்பில் வைத்திருக்கிறார்.
சினேகம் பவுண்டேஷனின் அக்கவுண்ட்டில் 1,41,797 ரூபாய் வைத்திருக்கிறார்.
உழவன் திரைக்களம் அக்கவுண்ட்டில் 47,212 ரூபாய் வைத்திருக்கிறார்.
உழவன் டிவி அக்கவுண்ட்டில் 10,000 ரூபாய் வைத்திருக்கிறார்.
கனரா பேங்க் அக்கவுண்ட்டில் 2,84,468 ரூபாய் வைத்திருக்கிறார்.
கரூர் வைஸ்யா பேங்க் அக்கவுண்ட்டில் 17,024 ரூபாய் வைத்திருக்கிறார்.
ஆக்ஸிஸ் பேங்க் கணக்கில் தேர்தல் செலவுகளுக்காக 50,000 ரூபாய் வைத்திருக்கிறார்.
11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள XUV காரும், 3 லட்சத்து 50 ரூபாய் மதிப்புள்ள யுண்டாய் காரும் வைத்திருக்கிறார்.
இதனுடன் 25,000 ரூபாய் மதிப்புள்ள டிவிஎஸ். ஜூபிடர் டூவீலரும் வைத்திருக்கிறார்.
ஆக மொத்தம் கவிஞர் சினேகனிடம் 27 லட்சத்து 92 ஆயிரத்து 218 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் வைத்திருக்கிறார்..
81 லட்சம் மற்றும் 72 லட்சம் மதிப்புள்ள நிலங்களும் சினேகனிடத்தில் உள்ளன.
ஆக மொத்தத்தில் 1 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கான அசையா சொத்துக்கள் வைத்திருக்கிறார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வீட்டு லோனாக 10 லட்சம் ரூபாயும், திவான் ஹவுஸிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வீட்டு லோனாக 17 லட்சம் ரூபாயும், ஹவுஸிங் பைனான்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கார் லோனாக 6,05,863 ரூபாயும், யெஸ் வங்கியில் 4,11,863 ரூபாயும் இருக்கிறதாம்.
இதனால் மொத்தக் கடன் தொகை 37 லட்சத்து 17 ஆயிரத்து 726 ரூபாயாக இருக்கிறது.











