Tuesday, May 26
Shadow

கொரோனா வைரஸ் தடுப்பு பொதுமக்கள் நிதியுதவி அளிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேண்டுகோள்.

உலக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் ஒரு நாவிதன் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இதனால் பல உயிர்கள் பலியாகி உள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போதிலும் மக்கள் கொரோனா வைரஸ் பயம் அறியாது ஊர்களில் சுற்றித் திரிந்து திரிகிறார்கள்.

மத்திய அரசும் மாநில அரசுகள் இந்த கொரோனா வைரஸை தடுக்க போராடி வருகின்றன இந்த திட்டத்திற்கு பல கோடிகள் நிதி ஒதுக்கி உள்ளனர்

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் நன்கொடைக்கு வருமானவரி சட்டம் பிரிவு 80 ஜி யின் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு.

பொது நிவாரண நிதி தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களுடன் நேரடியாக வழங்க வேண்டாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சத்திற்கு மேல் உதவி செய்யும் நபர்கள் நிறுவனத்தின் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் எதோ

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
தலைமைச் செயலகம்
சென்னை 600009
கணக்கு எண்
117201000000070
IFSC – IOBA0001172

இந்த வங்கி கணக்கில் பொதுமக்களாகிய நீங்கள் நிவாரண நிதியை அளிக்கலாம்.