தமிழக முதல்வரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த சூப்பர் ஸ்டார்.

சென்னை 17 மே 2021

தமிழக முதல்வரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண நிதி வழங்கி மக்களுக்கு கோரிக்கை வைத்த சூப்பர் ஸ்டார்.

இன்று மே 17ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அப்போது கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு நிவாரண நிதியாக ரூ 50 லட்சம் வழங்கினார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது…

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும்.

இதை மக்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்”

என்று பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

error: Content is protected !!