Friday, June 18
Shadow

கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு..

சென்னை 18 மே 2021

கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மேற் கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நோய தொற்று தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொது மக்கள் முதல் திரை உலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது வரை நேற்று (17 மே 2021) தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என மொத்தமாக இதுவரை
69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுகாக வழங்கப்பட்டுள்ள
நிவாரண நிதிக்கு இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள நிவாரண நிதிக்கு  ரூபாய் 69 கோடியில் இருந்து முதற்கட்டமாக கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சைக்கு ரூபாய்.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவரும்  கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

CLOSE
CLOSE