Wednesday, April 1
Shadow

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நிவாரண நிதியாக ரூபாய் 70 லட்சம் கொடுத்த தெலுங்கு நடிகர் ராம் சரண்.!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஜனா சேனா கட்சியின் நிறுவனரும் நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் முன்னெச்சரிக்கைஅளித்ததா நடவடிக்கையாக ரூபாய் 2 கோடி அளித்தார் என்ற செய்தியை ஏற்கனவே நாம் பார்த்தோம்.

இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சமும் பிரதமரின் நிவாரண நிதி தொகைக்கு ஒரு கோடியும் கொடுத்திருந்தார். பவர் கல்யாண்

இந்த நிலையில் இவரின் அண்ணன் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் அவர்களும் தன்து பங்குக்கு ருபாய் 70 லட்சம் நிவாரண நிதியை அளித்துள்ளார்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஆந்திரா தெலுங்கானா மற்றும் பிரதமரின் நிவாரண தொகைக்கு ரூபாய் 70 லட்சம் அளித்துள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் ராம்சரண்