Saturday, March 28
Shadow

கொரோனா வைரஸ் எதிரொலி தமிழகத்தில் அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் வரும் 19ம் தேதி முதல் ரத்து – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.:

தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் 19.03.2020 முதல் ரத்து செய்யப்படும் – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் நீங்கள் நன்கு அறிவீர்கள்

அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தின் பல முன்னேறிய நாடுகள் கூட கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து பல லட்சம் கோடிகளை இதற்காக அறிவித்து கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான முயற்சிகளை முழுவீச்சில் எடுத்து வருகிறது.

நமது மத்திய அரசு மாநில அரசும் இதன் அபாயத்தை நன்கு உணர்ந்து கொரோனா வைரஸ் நமது மக்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு விதமான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வந்தபின் போராடுவதை விட வரும் முன் காப்பதே உத்தமம் என்ற அளவில் போராடும் நமது அரசுகளை மீறியும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது முதல் பலியும் டெல்லியில் ஆரம்பித்துவிட்டது பல்வேறு விதமான வசதிகளும் உள்ள மேற்கத்திய நாடுகள் கூட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட முடியாமல் திணறி வரும் நிலையில் பாதுகாப்பு வசதிகள் குறைந்த நமது நாட்டில் இதை நாம் அனைவரும் இணைந்து போராட வில்லை என்றால் பாதிப்புகளை தடுப்பது மிகவும் சிரமமாகும்.

அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றம் உள்பட அனைத்து அமைப்புகளும் திரைப்பட பணிகளை
19. 3. 2020 முதல் நிறுத்தி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தற்போது குறைவாக உள்ளது என்றாலும் திரைப்படத்துறையில் பாதுகாப்பு சுகாதாரமும் மிகவும் குறைவாக உள்ளதால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் 19 3 2020 முதல் திரைப்படம் தொலைக்காட்சி விளம்பரப் படங்கள் போன்ற அனைத்து பிரிவு திரைப்பட பணிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் பொருளாதார ரீதியிலும் தயாரிப்பு ரீதியாகவும் பெரும் சிரமங்களை எதிர் கொள்வார்கள் என்றாலும் நமது தொழிலாளர்களின் வாழ்வு மிகவும் முக்கியமானது என்பதால் இந்த கடினமான முடிவுவை எடுத்துள்ளோம்.

எனவே திரைப்பட தொழிலாளர்களும் திரைப்பட தயாரிப்பாளரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

தலைவர் செல்வமணி பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் பொருளாளர் பி என் சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்