Thursday, December 9
Shadow

சபாபதி திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5.

நடிகர் நடிகைகள் – சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, புகழ்,
உமா பத்மநாபன் ரமா, வைஷ்ணவி, மதுரை முத்து, மற்றும் பலர்.

தயாரிப்பு – ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட்.

இயக்கம் –  ஆர்.சீனிவாச ராவ்.

ஒளிப்பதிவு – பாஸ்கர் ஆறுமுகம்.

படத்தொகுப்பு – லியோ ஜான் பால்.

இசை – சாம் சி.எஸ்.

திரைப்படம் ஒடிடியில் வெளியான தேதி – 19 நவம்பர் 2021

ரேட்டிங் –2.75 /5

விதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

என்ன நடந்தாலும் விதியின் மீது குறை சொல்பவர்களும், பழி சொல்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் விதியின் விளையாட்டு என்று கூட சொல்லலாம்.

சமீபத்தில் நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கி ZEE 5 ஒடிடி தளத்தில் வெளிவந்த விநோதய சித்தம் திரைப்படம் போலவே இந்த திரைப்படத்திலும் நடிகர் சந்தானத்திடம் விதி விளையாடுகிறது.

தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை நல்ல வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் தந்தை எம்.எஸ்.பாஸ்கர்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தந்தை எம் எஸ் பாஸ்கரின் மகன் சந்தானம்.

அரியர்ஸ் வைத்து படித்து முடித்தவர்.

தனது மகன் கதாநாயகன் சந்தானம் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தந்தை எம் எஸ் பாஸ்கர்.

பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் கதாநாயகன் சந்தானம்.

பல வேலைகளுக்கு செல்லும் கதாநாயகன் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது.

இதனால் விரக்தி அடையும் கதாநாயகன் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார்.

போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய காரியம் நடக்கிறது.

இதன் மூலம் அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடுகிறது.

அதன் பின் கதாநாயகன் சந்தானம் விதியின் விளையாட்டில் சிக்கிக் கொள்கிறார்.

இறுதியில் விதியின் விளையாட்டில் கதாநாயகன் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி எதிர்கொண்டார்? என்பதே இந்த சபாபதி திரைப்படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது.

கதாநாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலையில்லை.

திரைப்படத்தில் கதாநாயகன் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு மிகவும் பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது.

தந்தைக்குரிய பொறுப்புடன் நடிப்பில் படம் பார்க்கும் ரசிகர்கள் இடையே கைத்தட்டல் வாங்குகிறார்.

குக் வித் கோமாளி புகழ் அறிமுகமாகும் திரைப்படம் என எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகன் சந்தானம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது.

Read Also  ஆக்‌ஷன் திரை விமர்சனம்

இரண்டே காட்சிகளில் மட்டும் வந்துவிட்டு சிரிக்கவும் வைக்க முடியாமல், காணாமல் போகிறார் புகழ்.

சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். இவருடைய நடிப்பு எதார்த்தமாக இல்லை ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

ஒருவர் வாழ்க்கையில் விதி விளையாடுவதை திரைப்ப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ்.

கதையையும் கதைக்களத்தையும் மிகவும் சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார்.

திரைப்படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் படம் பார்க்கும் ரசிகர்கள் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

திரைப்படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் திரைப்படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது.

குறிப்பாக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் அருமையாக இருந்தது.

காமெடி படங்களுக்கு இசையமைப்பது என்பது தனி கலை. த்ரில்லர் திரைப்படங்களுக்கு இசையமைத்துப் பழகிப் போன சாம் சிஎஸ் பின்னணி இசையில் தடுமாறியிருக்கிறார்.

சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘சபாபதி’ திரைப்படம் ஓகே.

CLOSE
CLOSE