வீராபுரம் 220 திரை விமர்சனம். ரேட்டிங் –2 /5

நடிகர் நடிகைகள் – அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர்.

தயாரிப்பு – சுபம் கிரியேஷன்ஸ்

இயக்கம் – செந்தில்குமார்

ஒளிப்பதிவு – பிரேம்குமார்

படத்தொகுப்பு – கணேஷ்

இசை – ரித்தேஷ்-ஸ்ரீதர்

திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021

ரேட்டிங் –2 /5

மணல் மாபியாவால் பாதிக்கப்படும், ஒரு சிறு நகரத்தின் நண்பர்கள் குழு அதற்கு எப்படி பழிவாங்குகிறது என்பதே கதை.

மணல் மாபியா கதைகள் பல திரைப்படங்கள் வந்திருக்கிறது.

அதைப்போல் கதையுடன் வந்திருக்கும் திரைப்படம்தான் வீராபுரம்.

ஒரு சிறு நகரம் ஐந்து நண்பர்கள் அவர்களின் பிரச்சனைகள், காதல் சோகங்கள், இதற்கிடையில் அந்த சிறு நகரத்தில் மணல் கடத்தல் காரணமாக, ஆக்ஸிடெண்ட் என்கிற பெயரில் தொடர் கொலைகள் நிகழ்ந்து வர, அதில் நாயகனின் தந்தை இறந்து விடுகிறார் கதாநாயகன் என்ன செய்கிறான்

நடக்கும் தொடர் கொலைகளை கதாநாயகன் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த வீராபுரம் திரைப்படத்தின் மீதிக்கதை.

அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் மகேஷ் தவிர மற்ற நடிகர்கள் அனைவருமே பெரும்பாலும் புதுமுகங்கள்தான்.

கதாநாயகன் மகேஷ் அவரது நண்பர்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்வை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்றைய இளைய சமுதாயத்தின் காதல், குடி, நட்பு எல்லாம் திரைப்படத்தில் அழகாக வந்திருக்கிறது.

வில்லனாக வரும் சதீஷ் தமிழ் திரைப்பட உலகில் கண்டிப்பாக ஒரு நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வரலாம்.

அவரது பார்வையும் நடிப்பும் தெலுங்கு திரைப்பட வில்லன்களை மிஞ்சும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது.

அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.

முதல் பாதி முழுக்க இளைஞர்களின் காதல் , சண்டைகள் மட்டுமே திரைப்படமாக இருக்கிறது.

எல்லா கதைகளும் சென்னை பக்கமாகவே சுற்றிக்கொண்டிருக்க, இந்தகதை தென் தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை சொல்வதோடு ஆரம்பித்து, அங்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் மணல் மாஃபியாவை சேர்த்திருப்பது.

மணல் மாஃபியா பற்றி சொல்ல வேண்டிய திரைப்படத்தில் இடைவேளை வரை அது எதுவுமே வராமல் இருப்பது இந்த வீராபுரம் திரைப்படத்திற்கு மைனஸ்.

சிறு படஜெட் திரைப்படம் என்பது படமெங்கும் பிரதிபலிக்கிறது.

இசையும் பிண்னணியும் அந்தத் திரைப்படத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது பாடல்கள் பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை.

திரைப்படத்தின் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் பரபரப்பாகவே செல்கிறது.

திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் நிஜத்தில் சாத்தியம் இல்லையென்றாலும் திரைப்படத்திற்கு நியாயம் இருக்கிறது.

சண்டைக்காட்சிகள் பரபரக்கிறது.

ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு இந்தத் திரைப்படத்திற்கு சுமார் ரகம்.

கணேஷின் படத்தொகுப்பு திரைப்படத்தின் காட்சிகளை கச்சிதமாக ஒருங்கிணைத்திருக்கிறது.

வீராபுரம் திரைப்படம் சுமாரான படம்