சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் கண்டிப்பாக வேண்டும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து குஷ்பூ வேண்டுகோள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை.

இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால் தினக்கூலி பணியாளர்கள் கடும் சிரமத்தில் ஆளாகி உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்வின் ஒரு பகுதியாக 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால் 200 பேர் பணியாற்றும் இடத்தில் 20 பேரை கொண்டு பணியாற்ற முடியாது.

குறைந்தது 50 சதவிகிதம் பேர் அல்லது 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்புவும், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.