பிரபல சின்னத்திரை நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இறப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை இந்தியாவில் 17,400 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஒட்டு மொத்த உலகமே முடங்கியுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் பொது மக்கள் அனைவரும் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

சின்னத்திரை ( டிவி சீரியல் )
படப்பிடிப்பு மட்டும் சில தளர்வுகளுடன் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சின்னத்திரை ( டிவி சீரியல் ) படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இது குறித்து இவர் கூறியுள்ளதாவது..

நான் இந்த துறையை நம்பித்தான் இருக்கிறேன். அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று கூற முடியாது.

நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன்.

எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்”

என சின்னத்திரை நடிகை நவ்யா சாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!