சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு!!!

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.

ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 9 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் கதாநாயகி காஜல் அகர்வால்
நூலிழையில் உயிர் தப்பினர்.

இனிமேல் திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்தன.

இதனை வெறும் பேச்சாக இல்லாமல் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளார் ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்து பட தொழிலாளர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார்.

இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் மாநாடு’ படக்குழுவினரின் இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

error: Content is protected !!