நடிகர் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் நடித்து வரும் மாநாடு திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடிக்கும் மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் டி ஆர் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிலம்பரசன் டிஆர்க்கு ஜோடியாக வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, விலகி உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ். ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.












