Saturday, September 19
Shadow

சுதந்திர தினத்தில் முன்னிட்டு தளபதி விஜய் ரசிகர்களுக்கு ‘மாஸ்’டர் திரைப்படத்தின் ஸ்பெஷல் ‘Quit Pannuda பாடல் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்திய சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த விடுமுறை நாளில் ஏதாவது புதிய திரைப்படங்கள் வெளியாகும்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் எந்த திரைப்படமும் கடந்த 5 மாதங்களாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுக்கவுள்ளது மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ‘Quit Pannuda என்றொரு பாடல் உள்ளது-

அந்த பாடலை சுதந்திர தினத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.