Saturday, March 28
Shadow

சூப்பர் ஸ்டாருக்கு ஐயப்பன் பாடல் தளபதிக்கு அம்மன் பாடல் கடவுளை நம்பாத கமலுக்கு அனிருத்தை கலாய்க்கும் எந்த பாடல்ன்னு தெரிலயே? இசையைமப்பாளர் அனிருத்.

சூப்பர் ஸ்டாருக்கு ஐயப்பன் பாடல் தளபதிக்கு அம்மன் பாடல் கடவுளை நம்பாத கமலுக்கு அனிருத்தை கலாய்க்கும் எந்த பாடல்ன்னு தெரிலயே? இசையைமப்பாளர் அனிருத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அது ஐயப்பன் பாடல் காப்பி என கூறப்பட்டது.

இதனால் இசையைமப்பாளர் அனிருத்தை பலரும் சும்மா கிழித்தனர்.

தற்போது மீண்டும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் இசையைமப்பாளர் அனிருத்.

ஓரிரு தினங்களுக்கு முன் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியானது.

இந்த பாடல் வடிவேலு நடித்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை… பாடலை காப்பியடித்துள்ளார் என கிண்டல் அடித்துள்ளனர்.

இந்த நிலையில் அனிருத் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும இந்தியன் 2 படத்தில் இசையமைக்கவுள்ளர்.
இசையைமப்பாளர் அனிருத்.

ரஜினிகாந்த், மற்றும் தளபதி விஜய் இருவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர் உலகநாயகன் கமல்ஹாசன்.

அவருக்கு என்ன செய்வார் அனிருத்? என கிண்டலடித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு இணையத்தில் பதிவிட்டுள்ளனர்…

தலைவருக்கு ஒரு பாட்டு குடுத்தமாதிரி, அம்மன்கிட்ட இருந்து இன்ஸ்பயர் ஆகி தளபதிக்கு ஒரு பாட்டு குடுத்துருக்காரு..

இத போயி தப்பா பேசிக்கிட்டு…

ஆமா கமல்ஹாசன் நாத்திகராச்சே… அவருக்கு என்ன பாட்டுனு தெரிலயே?