நடிகர் அஜித்குமார் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் வெளியாகப்போகும் முதல் பாடல்? ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்ஸ்.!

சென்னை 06 டிசம்பர் 2022 நடிகர் அஜித்குமார் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் வெளியாகப் போகும் முதல் பாடல்? ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்ஸ்.!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இந்த துணிவு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு லிரைப்படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் முவரும் 3வது முறையாக இணைந்துள்ளனர்.

வலிமை திரைப்படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு திரைப்படத்துக்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அண்மையில் முடிவடைந்தன.

துணிவு திரைப்படம் வருகிற பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அஜித்குமார் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக டிசம்பர் 9ஆம் தேதி அஜித்குமாரின் அறிமுக பாடல் வெளியாகிறது.

இதை போனி கபூர் தன் டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.