சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவர்கள் கருத்து என்ன அப்பல்லோ மருத்துவமனை முன்பு ரசிகர்கள் பிரார்த்தனை!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவர்கள் கருத்து என்ன அப்பல்லோ மருத்துவமனை முன்பு ரசிகர்கள் பிரார்த்தனை!!
சென்னை 03 அக்டோபர் 2024 செப்டம்பர் 30ஆம் தேதி அன்று இரவு திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெஞ்சுவலி மற்றும் வயிறு வலி காரணமாக உடனடியாக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
உடல்நலக்குறைவை காரணமாக கூறி, அரசியலுக்கு வரும் முடிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போது கைவிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்
நெஞ்சுவலி மற்றும் அடிவயிற்று
வலி காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் பெரிதாகி விக்கம் இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் உடல் நலம் குறித்து அவ்வப்போது
அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் அடைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் அருகே ரசிகர்கள் குவிந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் அப்பல்லோ மருத்துவமனை முன் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தமிழக ஆளுநர் ரவி, பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுல பிரபலங்களும் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் 02 அக்டோபர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மறுப்பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட டிரைலர் மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நல குறைபாடு இரு மாறுபட்ட மனநிலைகள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உள்ளனர்.











