Monday, September 27
Shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி எப்படியிருக்கிறார் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

சென்னை : 26 டிசம்பர் 2020

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘அண்ணாத்த’.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பில் தளத்தில் பணி புரிந்தா எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் மற்றும் குஷ்பு மீனா கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த அண்ணாத்த திரைப்படத்தில் வெற்றி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என அண்ணாத்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம்.

அவருடைய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் மிகக்கவனமாக கொடுக்கப்படுகிறது.

சில பரிசோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும்.

அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார்.

அவருடைய நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம்.

அவரது உடல்நலம் கருதி யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினரும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மகள் அவருடன் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரஜினிகாந்தின் உடல்நலம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விசாரித்து அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ரத்த அழுத்த அளவில் சீரின்மை மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்னைகளும் இல்லை என்றும் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் சீராகி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை தரப்படும் என மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also  நடிகை டாப்ஸிபெண்ணுக்கு "அனபெல்சேதுபதி” திரைப்படத்தில் ஆங்கிலத்தில் பின்னணி குரல் கொடுத்த நடிகை பிரியாலால் !

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்துள்ளார்.

அதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டவர்களும் நலம் விசாரித்துள்ளனர்.

மேலும் நண்பர் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்துக்கள் என கமல் பதிவிட்டுள்ளார்.

#GetWellSoonThalaiva என ரஜினி ரசிகர்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

CLOSE
CLOSE