சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
சூப்பர் ஸ்டார் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து ஐதராபாத்தில் நடந்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் திடீரென நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.
இதனை ஏற்று கொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்.
அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்புகளை வெளியிட்டது.
அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்பவை போன்ற அறிவுரைகளை அப்பல்லோ மருத்துவர்கள் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காரில் வெளியே வந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.













