தீபாவளி பண்டிகையையொட்டி தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை 24 அக்டோபர் 2022 தீபாவளி பண்டிகையையொட்டி தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆண்டதோறும் தீபாவளியொட்டு தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை முதல் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தின் வாசலில் நின்றவாறு ரசிகர்களை கையாசைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை வாழ்த்தி பேசும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது அடுத்த பெரிய திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார்.

இது 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மாஸ் மசாலா ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் விநாயகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மூன்றாவது முறையாக ‘ராக்ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு தலைவர்களும், நடிகர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்போது ரசிகர்கள், தலைவா தலைவா என்று கோஷமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை ரஜினி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

https://twitter.com/RajiniTrendPage/status/1584397303091060737?t=1mYXjhwHYobL1ehWNVzuYw&s=19

https://twitter.com/RajiniFollowers/status/1584398413042683906?t=Pk44FBCOU0dw6kr3Urro5Q&s=19