சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதை நாங்கள் கேட்கவில்லை இயக்குனர் பேரரசு.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான FEFSI க்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.

மற்ற திரைப்பட சார்ந்த சங்கங்களுக்கு அவர் உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் பாரத பிரதமர் நிவாரண நிதிக்கும் அவர் நிவாரணம் நிதி எதுவும் இன்று வரை வழங்கவில்லை.

இந்த நிலையில் திரைப்பட துறை சார்ந்த 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வழங்கியிருந்தார்.

இந்த உதவி தகவலை எந்த மீடியாவுக்கும் செய்தி கொடுக்க வேண்டாம் என்று தான் கூறியிருந்தாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

ஆனால் அதையும் மீறி தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.

“ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.

அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!” என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.