Friday, July 10
Shadow

சொகுசு காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் மது பாட்டில் கடத்திய டைம் இல்ல தாதா 87 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இதனால் மது கடைகளும் அனைத்துமே அடைக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஒரு சில தளர்வுகளுடன் மதுக்கடைகள் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ள சிவப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் முற்றிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மற்ற மாவட்டங்களில் வாங்கப்படும் மது பாட்டில்களை காரில் கடத்தி செல்கின்றனர் மது பிரியர்கள்.
இதனை தடுக்க சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் மடக்கி வாகன சோதனைக்கு நிறுத்தினர்.

காரின் கண்ணாடியின் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த காரை பரிசோதனை செய்தனர் போலீசார் காருக்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.

அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்துள்ளனர் போலீசார்.

அப்போது அவர்களை அதிர்ச்சியுள்ளாக்கும் வகையில் கார் முழுக்க பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தன.

போலீஸ் விசாரணையில் காரில் வந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் தாதா87 எனற திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார்.

மேலும் டைம் இல்ல என்ற திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறாராம்.

அந்த தயாரிப்பாளரோடு ஆனந்தராஜ் என்ற பல் டாக்டரும் இருந்துள்ளார்.

மது கடத்தல் வழக்கில் இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

சில தினங்களுக்கு முன் நடிகை ரம்யாகிருஷ்ணனும் இதுபோல தனது காரில் மது கடத்தலில் சிக்கியது தஙகளுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே காரை டிரைவரை ஜாமீனில் அழைத்து சென்றுவிட்டார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Beer and alcohol bottles seized from DhaDha87 Producers car