நடிகர் ரியாஸ் கானை தாக்கிய மர்ம நபர்கள்.?

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒரு சிலர் வெளியே தேவை இல்லாமல் நடமாடுவதை பார்க்கமுடிகிறது.

இதன் காரணமாக இவர்கள் மூலமாகவே மிக எளிதாக மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

அப்படித்தான் தனது நடிகர் ரியாஸ் கான் வீட்டின் அருகே நின்றிருந்த இளைஞர்களை கேள்வி கேட்ட நடிகர் ரியாஸ்கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அடுத்த நீலாங்கரை என்ற பகுதியில் உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் யார் அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த இளைஞர்களை கலைந்து போகச் சொல்லி நடிகர் ரியாஸ் கான் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்க முயன்றவரை தான் இந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நீலாங்கரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் ரியாஸ்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் என் வீட்டு பால்கனியில் நின்று காபி குடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் வீட்டின் அருகே 10 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் தம்பி ஏன் இங்கு நின்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அவர்கள் காற்று வாங்க நின்று இருப்பதாக கூறினார்கள்.

இது தப்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுள்ள நிலையில் இப்படி நீங்கள் வெளியே வரக்கூடாது.

நீங்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சென்று காற்று வாங்குங்கள்

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்சினையை குறித்தும் விலக்கினேன்.

அப்போது நாங்கள் ரோட்டில் தான் நிற்கிறோம் உங்கள் வீட்டில் நிற்கவில்லை என்று கூறி தகராறு செய்தனர்.

நடிகர் ரியாஸ்கான் என்றால் திரைப்படத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை கூற வேண்டாம்.

எங்களுக்கு கொரோனா வைரஸ் நோய் வராது என குடும்ப மற்றும் சுற்றி இருப்பவர்களை காப்பாற்றவே இதை கூறினேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவன் என்னை தலை மீது தாக்க முயன்றான்.

அந்த அடி எனது தோள்பட்டை மீது விழுந்தது தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக அனைவரையும் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு எங்களுக்கு வராதுன்னு ஏன் சொல்றாங்க ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாங்க அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் எல்லாம் இருக்கு நாம் எல்லாருமே சேர்ந்து ஒத்துழைத்தால் தான் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பை ஒழிக்க முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

https://www.instagram.com/tv/B-yMGXyBlzz/?igshid=ux5wppeayvm1

 

error: Content is protected !!