டாக்டர் திரை விமர்சனம். ரேட்டிங் –3.5 /5
நடிகர் நடிகைகள் – சிவகார்த்திகேயன், வினய் ராய், யோகி பாபு, இளவரசு, அருண் அலெக்சாண்டர், சுனில் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, சிவன் அரவிந்த், மிலிந்த் சோமன், ரகுராம், ராஜிவ் லட்சுமணன், பிரியங்கா மோகன், அர்ச்சனா, ஜாரா, தீபா,
மற்றும் பலர்.
தயாரிப்பு – கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ். எஸ்.கே புரொடக்சன்ஸ்.
இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.
ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன்.
படத்தொகுப்பு – ஆர். நிர்மல்
இசை – அனிருத் ரவிச்சந்திரன்.
திரைப்படம் வெளியான தேதி – 09 அக்டோபர் 2021
ரேட்டிங் –3.5 /5
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய
நயன் தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான நெல்சன் திலீப்குமாருக்கு இந்த டாக்டர் இரண்டாவது திரைப்படம்.
மிக மிக சீரியஸான காட்சிகளிலும் காமெடியைத் தூவி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சிரிக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது முந்தைய திரைப்படத்தை போலவே காமெடி காட்சியில் கலக்கி இருக்கிறார்.
முதல் திரைப்படத்தில் போதைக்கடத்தலை கதையை கையில் எடுத்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படத்தில் குழந்தைக் கடத்தலை கதையை கையில் எடுத்துள்ளார்.
தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம்தான் டாக்டர்.
தமிழ் திரைப்பட உலகில் வந்துள்ள மற்றுமொரு ஆள் கடத்தல் கதைதான் இந்த டாக்டர் திரைப்படம்.
தமிழ் திரைப்பட உலகில் காமெடி கதாநாயகனாக தொடங்கி மிக பெரிய ஆக்சன் கதாநாயகனாக தன்னை மெருகேற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய திரைப்படமாக இந்த டாக்டர் திரைப்படம் அமைந்துள்ளது
அடுத்து தளபதி விஜய் நடிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்திலும் ஏதோ ஒரு கடத்தல் கதையாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.
திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு டாக்டர்
என்பதால் திரைப்படத்தின் பெயரும் டாக்டர் என வைத்துள்ளார்கள்.
ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.
கதாநாயகி பிரியங்கா மோகனை ஒரு நிகழ்ச்சியில்
கதாநாயகன் சிவகார்த்திகேயன்
சந்தித்து காதலித்து திருமண வரை செல்கிறது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன், ஒரு சில காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள்.
இந்நிலையில், கதாநாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் மர்ம மனிதர்கள் சிலரால் கடத்தப்படுகிறார்.
கதாநாயகி பிரியங்கா மோகனின் காணாமல் போன அண்ணன் மகளை தேடும் பணியில் அவர்களது குடும்பத்துடன் ஈடுபடுகிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன் .
இந்த தேடுதல் வேலையில் பல திடுக்கிடும் தகவல்களும், மர்மங்களும் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வருகிறது.
கதாநாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் டாக்டர் திரைப்படத்தின் மீதிக்கதை.
டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இதுவரை தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து சற்று விலகி மற்றொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.
கலகலப்பு காமெடி என இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.
கதர் சட்டை கஞ்சி போட்டது போல இருக்கும் கதாநாயகன்
சிவகார்த்திகேயன் அவர்களின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், மிக பெரிய திரைப்படத்தில் நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார்.
மிக அழகாகவும் வந்து அளவான நடிப்பையும் கொடுத்து இருக்கிறார் கதாநாயகி பிரியங்கா மோகன்.
திரைப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் அவர்களை கலாய்க்கும் காட்சியில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
வினய் ராய்
வில்லத்தனத்தில் அருமையாக மிரட்டி இருக்கிறார்.
பல்வேறு இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது.
ரெடின் கிங்ஸ்லியின் காமெடி டாக்டர் திரைப்படத்திற்கு மிக பெரிய பக்கபலமாக இருக்கிறது.
அர்ச்சனா, தீபா சங்கர், யோகிபாபு ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்கு முன் திரைக்கதையில் அதிக விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது.
இடைவேளைக்குப்பின் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.
அனைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசை திரைப்படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், காட்சிகளை பிரம்மாண்டமாகவும், கதாப்பாத்திரங்களை அழகாகவும் காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் சிறப்பு.