Tuesday, July 14
Shadow

தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.

தெலுங்கு திரைப்பட உலகில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் தாக்கமும் அதிகமாக உள்ள நிலையில் அதன் காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் தற்போதுதான் ஊரடங்கு உத்தரவு விதிகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் வெளியில் அதிகமாக நடமாட ஆரம்பித்துள்ளார்கள்.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்கவே கூடாது என வலியுறுத்தியுள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

அவர் கூறியதாவது ’இப்போது தான் மெதுவாக வெளிவர தொடங்கியுள்ளோம்.

ஆனால் நிச்சயமாக இந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமான ஒன்று. ஒவ்வொரு முறை வெளியே போகும் போதும் மாஸ்க் அணிய மறக்காதீர்கள்’ இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.