தமிழக முதல்வர் ஆவேன் என இ.பி.எஸ்., ஒ.பி.எஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று, மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான உலக நாயகன் கமலஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘கமலஹாசன் 60’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரைத்துறையுணர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல்ஹாசன் சார்பில் ரூ. 1 கோடியை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள்.

ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் நடக்கும்” என கூறினார்.

  1. VID-20191118-WA0000