தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் இதோ…

சென்னை 07 மே 2021

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது.

தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கிறது.

முதன்முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழக முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில்  இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் துறையின் விவரங்கள் இதோ..

மாண்புமிகு திரு.மு க ஸ்டாலின் அவர்கள்– தமிழக முதலமைச்சர்

மாண்புமிகு திரு. துரைமுருகன் அவர்கள் – நீர்வளத்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. இ. பெரியசாமி அவர்கள் – கூட்டுறவுத்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. க. பொன்முடி அவர்கள் – உயர்கல்வி துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. எ.வ. வேலு அவர்கள் – பொதுப்பணித்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் – வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்கள் – தொழில் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி அவர்கள் – சட்ட துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி அவர்கள் – வீட்டு வசதி துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் – ஊரக தொழிற் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் – செய்தி துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. பி. கீதா ஜீவன் அவர்கள் – சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் – பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. ‌அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் – மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் – போக்குவரத்து துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் – வனத்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி அவர்கள் – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. பி.மூர்த்தி அவர்கள் – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. சா.மு. நாசர் அவர்கள் – பால்வளத்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யாநாதன் அவர்கள் – சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. சி.வி. கணேசன் அவர்கள் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. மா.மதிவேந்தன் அவர்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் – ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

ஆகிய 34 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் புதிய அமைச்சர்களாக 15 பேர் இடம்பெறவுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறவுள்ள நிலையில் இதில் 19 பேர் மூத்த அமைச்சர்களாகவும், 15 பேர் புதிய அமைச்சர்களாகவும் இடம்பெறுகின்றனர்.

மூத்த அமைச்சர்களில் வி. செந்தில் பாலாஜி முன்னதாக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

முதல்முறையாக திமுக ஆட்சியில் அமைச்சராக இடம்பெறுகிறார்.