தமிழில் மாஸாக களம் இறங்க இருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு.!

தளபதி நடிகர் விஜய் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் என்றால்

அதற்கு காரணமானவர். யார் என்று உங்களுக்கு தெரியுமா.

தெலுங்கு திரைப்பட உலகில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் மகேஷ்பாபு தான். அவர் தெலுங்கில் நடித்து ஒக்கடு திரைப்படம்தான்.

தமிழில் வெளிவந்த கில்லி. திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

அதைப்போல் போக்கிரிப் திரைப்படமும் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம்தான்.

ஆனால் அவர் நேரடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம்தான்.

அந்த ஸ்பைடர் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஸ்பைடர் படத்தோல்வியால் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மிகவும் மனதளவில் அப்செட் ஆகி இருக்கிறார் எனத் தகவல்கள் வந்தன.

அதனால் தமிழில் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

அதற்கான வாய்ப்பு தற்போது வந்திருப்பதாக தெரிகிறது.

அதாவது ஏஸ்.ஏஸ். ராஜமெளலி ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்குப் பின் மகேஷ்பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்ற தகவல் வந்துள்ளது.

எப்படியும் ஏஸ்.ஏஸ் .ராஜமெளலி திரைப்படம் எடுத்தால் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் திரைப்படமாகதான் இருக்கும்.

அதனால் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தமிழ் திரைப்பட உலகில் நல்ல ரீ என்ட்ரி இருக்கும் என்று நம்பலாம்!