தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு – நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சென்னை 19 ஏப்ரல் 2021

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு – நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கடந்த 2020 ஆண்டை விட இந்தாண்டு அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா தொற்று.

பல நடிகர் – நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில கலைஞர்கள் இறந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு – நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

இந்த தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.

error: Content is protected !!