தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் களமிறங்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனின் புதிய அணி.
பல தினங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பற்றி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் சிங்கார வேலன் பேசுகிறான்
இன்னைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்களாக இருக்கிறோம்.
இந்த அமைப்பில் கடந்த 10 ஆண்டுகளாகவே சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.
இதனால் படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது..
இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஏற்கனவே பதவி வகித்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த நிர்வாகிகளாக வருவதற்கு போட்டிபோட ஆயத்தமாகி வந்ததால்.
தங்களுடைய எதிர்கால நலன் கருதியும் தொழில் பாதுகாப்பு கருதியும் சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் திரு பாரதிராஜா அவர்கள் தலைமையில் தனி சங்கமாக பிரிந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் சென்றதால் இங்கே இருக்கிற சங்கத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
ஆனால் ஏற்கனவே நிர்வாக பொறுப்பில் இருந்து பல முறைகேடுகளை சிக்கி இன்றைக்கு பலராலும் கேள்வி கேட்கப்பட்டு கொண்டிருக்கின்ற சில பேர் தங்களுடைய சுய நலத்துக்காக நேற்றைக்கு ஒரு ஆலோசனைக் கூட்டத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் நடத்தி தனி அதிகாரியை சந்தித்து திரு பாரதிராஜா மீதும் மற்ற தயாரிப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு மனுவையம் கொடுத்துவிட்டு ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் அதற்கு நேர்மாறாக திரு பாரதிராஜா அவர்களே உங்கள் காலில் விழுந்து வழங்குகிறோம் நீங்கள் மறுபடியும் இங்கே வாருங்கள் உங்களை அன்னபோஸ்ட் ஆக நாங்கள் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறோம் என்று வினோதமான ஒரு பத்திரிகை பேட்டியில் நேற்றைக்கு அளித்தார்கள்.
திரு பாரதிராஜா அவர்கள் தலைமையை ஏற்றுக் கொண்டு தொழில் பாதுகாப்பு கருதி ஒரு 50 பேர் தனியாக சென்று விட்டார்கள்.
திரு தாணு அவர்களுடைய அழைப்பை ஏற்று அவர் தலைமையின் கீழ் நேற்றைக்கு ஒரு 50 தயாரிப்பாளர் திரண்டு உங்கள் முன்னிலையில் பேட்டியும் அளித்தார்கள்.
இவர்கள் 50-50 100 பேரு போக 1251 பேர் இந்த சங்கத்தில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்கிறோம்.
இதில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய தற்போது படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் நாங்கள் தனியாக இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.
யாரையும் கலந்து ஆலோசிக்காமல் யாருடைய கருத்தையும் கேட்காமல் நேற்றைக்கு தாணு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் திரு பாரதிராஜா அவர்கள் வந்தால் அவரை அன்னபோஸ்ட் ஆக தேர்ந்து எடுக்கிறோம் என்று கூறியது அவருடைய சொந்தக் கருத்தாகவும் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை பிரிந்து சென்றவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை அவர்கள் மீது புகார் கொடுத்து நடவடிக்கை கூறவுமில்லை.
இதுதான் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்து நாளை நாங்கள் தனி அணியாக ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து களம் காண்கின்றன நிலையில் அவர்களை எதிர்த்து களம் இறங்குவதற்கு அனைத்து பதவிகளும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதற்காக அணியை தயார் செய்து கொண்டிருக்கிறோம் அன்னபோஸ்ட் என்பதற்கெல்லாம் எங்க வாய்ப்பே இல்லை.
நிச்சயமாக தேர்தல் நடக்கும் தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்று ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகளை களைந்து சங்கத்தை சீரமைத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
நன்றி வணக்கம்
விநியோகஸ்தர்.
தயாரிப்பாளர் சிங்காரவேலன்