நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக விளக்கம் கேட்கும் டி ராஜேந்தர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 – 2021ஆம் ஆண்டுக்கான தேர்தல் இந்த மாதம் 22 நவம்பர் 2020 அன்று சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.
சங்கத்தின் தேர்தல் அன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
அன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303 பேர் வாக்காளர்களில் 1050 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1050 அன்று வாக்களித்தனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 27 பொறுப்புகளுக்கு ஆனால் 112 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி ராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒர் அணியும் போட்டியிட்டனர்.
இவர்கள் தவிர தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு JSK சதீஷ்குமார் துணை தலைவர் பதவிக்கு R.சிங்காரவடிவேலன் கதிரேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி ராமசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
செயலாளர்களாக R.ராதாகிருஷ்ணன் T.மன்னன் துணை தலைவர்களாக கதிரேசன் மற்றும் R.K.சுரேஷ் பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தமுள்ள 27 பதவிகளில் 16 இடங்களுக்கு முரளி ராமசாமியின் அணியினரும் சுயேச்சைகள் 3 பேரும் எட்டு இடங்களில் டி.ராஜேந்தர் அணியினரும் வெற்றிபெற்றுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் துணை தலைவருக்கு போட்டியிட்ட சிங்காரவடிவேலன் அவரை தொடர்ந்து பொருளாளருக்கு போட்டியிட்ட JSK சதீஷ் இருவரும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் பல குற்றசாட்டை கிளம்பி உள்ளார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வழக்கம்போல வெற்றி பெற முடியாதவர்கள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூற தொடங்கியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.
இப்போது புகார் கூறுபவர்களும் அது போன்ற வழிமுறைகளை கையாண்டார்கள் ஆனால் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானித்து வாக்களித்திருக்கிறார்கள்.
அந்த முடிவை ஏற்றுக்கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
தங்களிடம் ஆதாரம் இருப்பவர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும் அதை விட்டுட்டு வாட்ஸ் அப் குரூப்புகளில் பரபரப்பை கிளப்புவதால் எந்த பயனும் இல்லை என கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில புதிய கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது வெற்றி பெற முடியாதவர்கள் விரக்தி மனநிலையில் பேசுகின்றனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் டி.ராஜேந்தர் அணியிலும், சுயேச்சைகளுமாக 11 பேர் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்றார்.
இதற்கிடையில் இன்று காலை டி.ராஜேந்தர் சங்கங்களின் தனி அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த கோரிக்கை மனுவில்
அன்புடையீர் வணக்கம்
நான் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள 1303 உறுப்பினர்களில் 1050 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது 400க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்பது தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நமது சங்கத்தில் இருந்து வெளிவந்த அறிக்கையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவை காட்டவில்லை எனவும் கட்டத் தவறினால் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சிலர் 200க்கும் அதிகமான அடையாளம் தெரியாத தொடர்பு கொள்ள முடியாத உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஆண்டு சந்தாவை செலுத்தி அவர்களின் அடையாள அட்டையை பெற்று அதன் மூலம் கள்ள ஓட்டுகள் போட்டிருப்பதாக தெரியவருகிறது இது குறித்து எனது அணியினர் என்னிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டினை உண்மை தன்மை குறித்து அறிந்து என் அணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்துவது எனது கடமையாகும் எனவே தாங்கள் கீழ்கண்ட ஆவணங்களை எனக்கு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
1 வாக்களித்த 1050 உறுப்பினர்களின் முகவரி அலைபேசி எண் அடங்கிய பட்டியல்.
2 ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவானதாக தாங்கள் அறிவித்த வாக்குகளின் விபரம்.
3 வாக்களித்த உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் கையொப்பமிட்ட அடையாள அட்டையை பெற்றுக் கொண்டபோது சம்பந்தப்பட்ட உறுப்பினர் கையொப்பமிட்ட ரிஜிஸ்டர் இன் நகல்.
4 வாக்களிப்பதற்கு முன் வாக்குச்சீட்டுகளை பெறும் போது உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ரிஜிஸ்டர் நகல்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.













