Thursday, January 28
Shadow

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு  வெளியாகியுள்ளது.

சென்னை : 24 நவம்பர் 2020

சென்னையில்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் சென்னையிலுள்ள அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் 22 நவம்பர் 2020 அன்று நடைபெற்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர் அவர்களும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் டி ராஜேந்தர் அவர்களை தோற்கடித்து தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் 23. நவம்பர்.2020 காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணப்பட்டு வெற்றி பெற்ற பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தயாரிப்பாளர்கள் 1,303 பேர் ஓட்டு போட தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1090 பேர் புதுப்பித்த அடையாள அட்டைகள் பெற்றவர்கள்

அதில் 1050 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களித்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த தேர்தல் குறித்த முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த  தேர்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டி ராஜேந்தர் அவர்களை தோற்கடித்து தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி அவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி ராஜேந்தர் அவர்கள் 337 வாக்குகள் பெற்றுள்ளார்,

அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 557 வாக்குகள் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி வெற்றி பெற்றுள்ளார்

CLOSE
CLOSE