தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், திரையரங்கு உரிமையாளர்களுக்கு திரு. பாரதிராஜா அவர்களும், மேலும் பல தயாரிப்பாளர்கள் இணைந்து அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்.

செப்டம்பர் 7, 2020

பெறுநர்,
திரு.திருப்பூர் சுப்ரமணியம்,
தலைவர்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்,
சென்னை.

பொருள்: தயாரிப்பாளர்கள் – திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் செய்ய வேண்டிய ஒப்பந்தம்

திரு.சுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம்.

அதில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த பலரும், எங்கள் சங்கத்தை சாராதவர்களும் உள்ளனர். அந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து, தங்களின் மேலான பதிலை அனுப்பவும் அரசாங்கத்தின் அனுமதியோடு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
நாங்கள் இத்துடன் அனுப்பியுள்ள கடிதத்தை படித்து, அதற்கு தக்க ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
நன்றி,

பாசத்துடன்,

பாரதிராஜா
தலைவர்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.